ரிஷப் பண்ட் தேவையில்லை ; 2022 டி20 உலகக் கோப்பைக்கான முக்கிய 11 வீரர்களை தேர்ந்தெடுத்துள்ள இர்பான் பதான்

0
366
Rishabh Pant and Irfan Pathan

செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வது, மிகப்பெரிய கடினமான ஒரு பணியாக, இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்களுக்கு மாறி இருக்கிறது.

காரணம், கடந்த ஆண்டு யு.ஏ.இ-யில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு தோற்று வெளியேறியதும், இந்திய அணி நிர்வாகத்தால், டி20 அணிக்கான வீரர்களாகப் பார்க்கப்பட்டவர்கள் பார்ம் இல்லாமல் இருப்பதும், புதிய வீரர்கள் பார்மில் இருப்பதும்தான். இதனால் யாரை விடுவது யாரை சேர்ப்பது என பெரிய குழப்பத்தில் இந்திய கிரிக்கெட் தேர்வாளர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

சமீபக் காலத்தில், ஐ.பி.எல் தொடர் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர்களில், மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்ட ரிஷாப் பண்ட்டின் பேட்டிங் பார்ம், டி20 கிரிக்கெட் வடிவத்தில் சரிந்திருக்கிறது. அதேவைளையில் மூத்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் பார்ம் அபாரமாய் இருக்கிறது.

இந்தக் காரணங்களால் இந்த விசயம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தை தாண்டி, உலக கிரிக்கெட் வட்டாரத்திலும் பேசுப்பொருளாய் மாறி இருக்கிறது. பலரும் பலவிதமாத கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான முன்னாள் வீரர் இது குறித்துப் பேசியதோடு, டி20 உலகக்கோப்பைக்கான அவரது அணியையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் ரிஷாப் பண்ட்டிற்கு இடம் தரவில்லை. தினேஷ் கார்த்திக்கையே சேர்த்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்துக் கூறிய இர்பான் பதான் “ரிஷாப் பண்ட் அவர்குறித்து அவரே ஏமாற்றம் அடைந்திருப்பார். அவர் ஒரே மாதிரி தவறை செய்து ஆட்டமிழந்து விமர்சனத்துக்கு உள்ளாகிறார். அவர் இதை மாற்றிக்கொண்டால் தனது கிரிக்கெட் பயணத்தை நீட்டித்துக்கொள்ள முடியும். அதேசமயத்தில் தினேஷ் கார்த்திக் எல்லாவகையான ஷாட்ஸ்களையும் மிகச்சிறப்பாக ஆடுகிறார். இது அரிதானது. அவரால் சுழல், வேகம் என இரண்டிலும் சிறப்பாக விளையாட முடிகிறது. அவரிடம் அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடவேண்டுமென்று ஒரு வார்த்தையைச் சொன்னால், அவர் அதையும் சிறப்பாகச் செய்து முடிப்பார். இது அற்புதமான முக்கியமான விசயம்” என்று தெரிவித்திருக்கிறார்!

இர்பான் பதானின் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி:

இர்பான் பதான் துவக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவையும், மூன்றாவது இடத்தில் விராட்கோலியையும், நடுவரிசையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவையும் வைத்திருக்கிறார். பேட்டிங் வரிசையில் பினிசர்களாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கையும், ஸ்பின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவையும் வைத்திருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்களாக ஹர்சல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரீட் பும்ராவையும், சுழற்பந்து வீச்சுக்கு யுஸ்வேந்திர சாஹலை மட்டும் எடுத்து, தனது 11பேர் கொண்ட டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை வெளியிட்டு இருக்கிறார்!