இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு நான்காவது முறையாக நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தகுதி பெற்றது.
இதே உலகக் கோப்பை தொடரில் எட்டாவது முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று ஆஸ்திரேலியா அணி வந்து இருந்தது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான இரு அணிகளின் எண்ணிக்கை வித்தியாசத்திலேயே அனுபவம் யாரிடம் அதிகம் என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த அனுபவத்தை இந்த முறையும் இந்தியாவிடம் இந்தியாவில் வைத்து ஆஸ்திரேலியா சிறப்பாக காட்டியது.
ஆஸ்திரேலியா கேப்டன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பொழுது எல்லோரும் அதை ஆச்சரியமான ஒரு முடிவாகவே பார்த்தார்கள். ஆஸ்திரேலியா தவறான முடிவு எடுத்து விட்டதாக, இந்தியா மிக எளிமையாக வென்று விடும் என்பதாகவும் கூறினார்கள்.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியை தங்களது சிறப்பான பந்து வீச்சு திட்டத்தின் மூலம் அருமையாக கட்டுப்படுத்தி 240 ரன்களுக்கு சுருட்டினார்கள்.
ஆஸ்திரேலியா இந்த போட்டியில் பகுதி நேர பந்துவீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்தியது. மேலும் கவர் திசையில் வெளியில் ஃபில்டர்களை வைக்கவில்லை. இதன் காரணமாக பந்தை தொடர்ச்சியாக கொஞ்சம் ஷார்ட் ஆக வீசி லெக் சைடு காற்றில் அடிக்க தூண்டியது. கைவசம் விக்கெட் இல்லாததால் இந்திய பேட்ஸ்மேன்கள் அப்படி அடிக்க செல்லவில்லை. மேலும் ஆடுகளம் வறண்டு காணப்பட்டதால் கட்டர்கள் வீசி ஸ்ரேயாஸ் மற்றும் கேஎல்.ராகுல் விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
இதுகுறித்து இர்பான் பதான் கூறும்பொழுது “சிறந்த திட்டமிடப்பட்ட ஆட்டத்தில் இந்தியா தோற்றது என நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலியா சிறப்பான திட்டத்தை தீட்டி இருந்தது. ஆஸ்திரேலியா டாஸ் தொடங்கி ஆட்டத்தின் முடிவு வரையில் செய்திருந்த திட்டங்களின் பக்கத்தில் எந்த அணியும் செல்ல முடியாது என்று நினைக்கிறேன்.
இந்திய அணி அடுத்து ஜடேஜா மற்றும் சூரியகுமார் யாதவ் மட்டுமே இருக்கிறார்கள் என்று திரும்பிப் பார்த்ததால் அதிரடியாக விளையாடவில்லை. கே எல் ராகுல் ஆட்டம் இழந்ததும் இந்திய அணி முன்னேற முடியாத கட்டத்தில் சிக்கிக் கொண்டது.
ஃபீல்ட் செட்டிங்கில் ஆஸ்திரேலியா கவர் மற்றும் மிட் ஆப் திசையில் பீல்டர்களை வைக்கவில்லை. மேலும் அப்பொழுது பகுதி நேர பந்துவீச்சாளர்களையும் கொண்டு வந்தது. அந்த நேரத்தில் தாக்கி விளையாடி இருந்தால், டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஸ் ஆகியோர் பந்து வீச வந்து இருக்க மாட்டார்கள். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்களால் செய்ய முடியவில்லை!” என்று கூறி இருக்கிறார்!






