2024 டி20 உலககோப்பை.. ப்ளீஸ் இந்த 25 வயது ஃபாஸ்ட் பவுலரை கூட்டிட்டு போங்க – இர்பான் பதான் கோரிக்கை

0
127
Irfan

இந்தியாவில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. நடப்பு ஐபிஎல் டி20 லீக் மே மாதம் 26 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

இதற்கு அடுத்து ஜூன் மாத ஆரம்பத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த முறை டி20 உலக கோப்பையில் பங்குபெறும் அணிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இரண்டு சுற்றுகளை தாண்டியே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டி20 வடிவம் என்கின்ற காரணத்தினால் போட்டி கடுமையாக இருக்கும். எனவே மே மாதம் பாதையில் லீக் சுற்றுகள் முடிவடைந்ததும், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகளில் இருக்கும், டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள்,முன்னதாகவே அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் ஏப்ரல் மாதம் இறுதியில் டி20 உலகக்கோப்பை இந்திய அணி அறிவிக்கப்படும் என்கின்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இளம் வீரர்களில் திலக் வர்மா மற்றும் சிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? விக்கெட் கீப்பர்களாக யார் இருப்பார்கள்? மேலும் வேகப்பந்து வீச்சு யூனிட்டில் பும்ரா மற்றும் சிராஜ் உடன் இடம்பெறப் போகும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் யார் என்பது சுவாரசியமான கேள்வியாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் கூறும்பொழுது இந்திய வேகப்பந்து வீச்சு யூனிட்டில் பும்ரா மற்றும் சிராஜுடன் அர்ஸ்தீப் சிங் இருப்பார், ஆனால் நான்காவதாக லக்னோ அணிக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் இடது கை வேகப்பந்துவீச்சாளர் மோஷின் கானை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க : இது நடந்தா ரசிகர்கள் ஆதரவு இல்லாம போயிடும்.. ஐபிஎல் அணிகள் வைத்த திடீர் கோரிக்கை – ஏற்குமா பிசிசிஐ?

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான இடது கை வேகம் பந்துவீச்சாளர் மோஷின் கான் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒன்பது போட்டிகளில் விளையாடி 14 விக்கெட் கைப்பற்றி, ஓவருக்கு 5.75 ரன்கள் மட்டுமே தந்து அனைவர் கவனத்தையும் கவர்ந்திருந்தார். நடுவில் அவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், 150 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து குறைந்து இருக்கிறார். கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர், இந்த முறை இரண்டு போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

- Advertisement -