“ஐபிஎல்.. முகமது சமிய தப்பா வேற டீம்க்கு கூட்டிட்டு போக பார்த்தாங்க!” – குஜராத் டைட்டன்ஸ் சிஓஓ வெளியிட்ட பரபரப்பு தகவல்!

0
166
Shami

தற்போது உலக கிரிக்கெட் நடவடிக்கைகளை விட இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 தொடர் மிகப்பெரிய வெற்றி அடைந்த ஒன்றாக இருக்கிறது. எதிர்கால கிரிக்கெட் டி20 கிரிக்கெட்டை ஒட்டியே இருக்கும் என்பது போல, ஐபிஎல் தொடரை சுற்றிதான் இருக்கும் என்பதும் உண்மையாக மாறி வருகிறது.

இந்த நிலையில் பெரு வெற்றியடைந்திருக்கும் ஐபிஎல் தொடருக்கு அடுத்த வருடத்திற்கான மினி ஏலம் வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வீரர்களை இரு அணிகள் சம்மதத்துடன் டிரேடிங் செய்து கொள்ள கடைசி தேதியாக டிசம்பர் 13ஆம் தேதி நிர்ணிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதற்கு முன்பாக ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய டிரேடிங் நிகழ்வாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் சீசனிலேயே கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா ஆச்சரியம் அளிக்கும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறினார்.

இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் டைரக்டர் விக்ரம் சோலங்கி இதுகுறித்து கூறும்பொழுது ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவர் விரும்பியதை நாங்கள் அனுமதித்தோம் என்பதாக கூறியிருந்தார். இதில் ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்ல இருந்ததாக ஒரு தகவலும் இருக்கிறது.

இந்த நிலையில் தவறான முறையில் விதிகளுக்கு அப்பாற்பட்டு முகமது சமியை வேறொரு ஐபிஎல் அணி நிர்வாகம் அணுகியதாக தற்பொழுது குஜராத் டைட்டன்ஸ் சிஓஓ சிங் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். எந்த ஐபிஎல் நிர்வாகங்களும் வீரர்களுடன் நேரடியாக டிரேடிங் செய்ய பேசக்கூடாது. அவர்கள் முதலில் பிசிசிஐ இடம் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகுதான் எல்லா நடவடிக்கையும் ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் சிங் கூறும் பொழுது “ஒவ்வொரு அணி உரிமையாளர்களுக்கும் சிறந்த வீரர்களை வாங்குவதற்கான உரிமை உண்டு. ஆனால் ஐபிஎல் உரிமையாளர்கள் ஒரு வீரரை நேரடியாக அணுக கூடாது. இது விதிமுறைகளுக்கு எதிரானது. இப்படியான செய்கைகளில் எங்களுடைய அணி நிர்வாகம் மகிழ்ச்சி அடையவில்லை. முதலில் பிசிசிஐக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர் அவர்கள் எங்களுக்கு தகவல் சொல்வார்கள். அதன் பிறகுதான் முடிவு செய்யப்படும்.

குறிப்பிட்ட ஒரு ஐபிஎல் அணி நிர்வாக குழு எங்கள் வீரர் முகமது சமியை தனிப்பட்ட முறையில் அணுகியது தவறு. அவர்கள் விரும்பி இருந்தால் நேரடியாக எங்களிடம் பேசி இருக்கலாம். இதுகுறித்து நாங்கள் தாமதமாக தான் அறிந்தோம்!” என்று கூறி இருக்கிறார்!