உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே, வருடம் தோறும் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு, சில வருடங்களாக அதிகப்படியாக இருந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய எல்லா முக்கிய நாட்டு வீரர்களும் விளையாடுவதால், உலகம் தழுவிய ஆதரவு கிடைத்திருக்கிறது.
உலகக் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதுபோலவே ஐபிஎல் ஏலத்துக்கான எதிர்பார்ப்பும் எப்பொழுதும் மிக அதிகமாக இருக்கும். தங்களின் விருப்பமான அணிக்கும் மற்ற அணிகளுக்கும் எந்த வீரர்கள் செல்கிறார்கள்? எவ்வளவு விலைக்கு வாங்கப்படுகிறார்கள்? ஏலத்தில் எந்த அணி சரியாக செயல்பட்டது, படவில்லை? என்பதெல்லாம் சுவாரசியமான ஒன்றாக அமைகிறது.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒரு அணியின் வெற்றி என்பது களத்திற்கு வெளியே குறிப்பிட்ட சதவீதம் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது ஏலத்தின் போதே ஒரு அணியின் வெற்றி தோல்வி குறிப்பிட்ட அளவு முடிவாகி விடுகிறது.
மிக முக்கியமாக குறிப்பிட்ட தொகைக்குள் பிளேயிங் லெவனுக்கு சரியான வீரர்களை வாங்கி, மேலும் அந்த பிளேயிங் லெவலுக்கு சரியான மாற்று வீரர்களையும் வாங்கி, சரியான அணியை கட்டமைப்பது என்பது சவாலான ஒரு விஷயம். எனவேதான் ஐபிஎல் ஏலத்திற்கு எப்பொழுதும் பார்வையாளர்கள் அதிகம். சொல்லப்போனால் ஐபிஎல் ஏலமே ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான சுவாரசியத்தை ஒத்து இருக்கும்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி துபாயில் நடக்கிறது. தற்பொழுது இது குறித்தான முழு விவரங்களும் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் மினி ஏலம் இந்த வருடம் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி, மதியம் 2:30 மணிக்கு, துபாயில் துவங்குகிறது. மொத்தம் 333 வீரர்கள் வருகிறார்கள். இதில் 219 இந்திய வீரர்களும், 114 வெளிநாட்டு வீரர்களும் வருகிறார்கள்.
ஏலத்தில் முதல் செட்டில் வரக்கூடிய வீரர்கள் : ஹரி ப்ரூக், டிராவிஸ் ஹெட் ஸ்டீவன் ஸ்மித், கருண் நாயர், மனிஷ் பாண்டே, ரோமன் பவல் மற்றும் ரயிலி ரூசோவ்.
ஏலத்தில் இரண்டாவது செட்டில் வரக்கூடிய வீரர்கள் : பாட் கம்மின்ஸ், ஜெரால்ட் கோட்சி, ஹசரங்கா, டேரில் மிட்சல், அசமத்துல்லா ஓமர்ஸாய், ரச்சின் ரவீந்தரா, கிறிஸ் வோக்ஸ் மற்றும் சர்துல் தாக்கூர்.