“ஐபிஎல்.. காசுக்காக ஆஸ்திரேலியா வீரர்கள் செய்யும் தில்லுமுல்லு.. இத தடுக்கனும்” – அஷ்வின் குற்றச்சாட்டு!

0
998
Ashwin

ஆரம்ப காலகட்டங்களில் 80, 90களில் கிரிக்கெட் வீரர்களுக்கு வருமானம் தரக்கூடிய தனிப்பட்ட கிரிக்கெட் தொடராக, இங்கிலாந்தின் உள்நாட்டு கவுன்டி கிரிக்கெட் தொடர்கள் இருந்து வந்தன. வீரர்களுக்கு அங்கு நல்ல சம்பளம் கிடைத்தது. மேலும் சில வீரர்கள் அங்கேயே தங்கியும் விளையாடி வந்தார்கள்.

அதேபோல் இன்றைய காலகட்டத்தில் தேசிய அணிக்காக விளையாடும் பொழுது கிடைக்கும் பணத்தைவிட, இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 லீக்கில் விளையாடும் பொழுது நிறைய வருமானம் கிடைக்கிறது.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரில் தங்கும் வசதியில் ஆரம்பித்து, பயிற்சி, பாதுகாப்பு, போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் சம்பளம் என அனைத்தும் உயர் நிலையில் இருக்கிறது. ஐசிசி நடத்தும் தொடர்களை விட பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் இப்படியான விஷயங்களில் மிகவும் மேலே இருக்கிறது.

இந்த காரணங்களால் உலகில் எல்லா வீரர்களும் ஐபிஎல் தொடர் விளையாடுவதை விரும்புகிறார்கள். சிலர் ஆரம்ப காலகட்டங்களில் விரும்பாவிட்டாலும் கூட, தங்களுடைய கேரியரின் கடைசி காலத்தில் வருமானத்திற்காக ஐபிஎல் விளையாட விரும்புகிறார்கள்.

இன்று ஐபிஎல் மினி ஏலம் துபாயில் நடக்க இருக்கின்ற நிலையில், ஆஸ்திரேலியா வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெறுவது குறித்து, இந்திய அணி வீரர் அஸ்வின் ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அஸ்வின் கூறும் பொழுது “மெகா ஏலத்திற்கு வரும்பொழுது கிடைக்கும் பணத்தை விட, மினி ஏலத்திற்கு வரும் பொழுது கூடுதல் பணம் கிடைக்கிறது. சில குறிப்பிட்ட வீரர்களை மட்டும் எடுத்துப் பார்க்கும் பொழுது, அவர்கள் மெகா ஏலத்திற்கு வராமல், மினி ஏலத்திற்கு வருகிறார்கள்.

மூன்று ஆண்டுகள் விளையாடி சம்பாதிக்க வேண்டிய பணத்தை விட, இரண்டு ஆண்டுகளில் கூடுதல் பணம் கிடைத்து விடுகிறது. இந்த வகையில் ஒரு ஆண்டு அவர்களுக்கு மீதியாகி விடுகிறது. ஐபிஎல் தொடரில் இருக்கும் விதியை வைத்து அவர்கள் விளையாடுகிறார்கள். ஆனால் இதற்கு ஏதாவது முடிவு கட்டியாக வேண்டும்.

ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் நீண்ட வருடங்கள் கழித்து வருகிறார். இது அவர் குறித்தானது கிடையாது” என்பதாக கூறியிருக்கிறார். அஸ்வின் இந்த பேச்சில் மறைமுகமாக ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சை குறி வைத்து கூறி இருக்கிறார். மேலும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் கரன் போன்ற இங்கிலாந்து வீரர்களும் இதே நடைமுறையை இந்த மெகா ஏலத்தில் கடைப்பிடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.