ஐபிஎல் ஏலம் 2024.. யாருமே வாங்காத 10 பிரபல வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள்!

0
20590

நேற்று நடந்து முடிந்திருக்கிற 17வது ஐபிஎல் சீசனுக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் பல ஆச்சரியமான நிகழ்வுகள் நடைபெற்று இருக்கிறது. எதிர்பாராத வீரர்கள், எதிர்பாராத விலைக்கும், எதிர்பார்த்த வீரர்கள் மலிவான விலைக்கும் சென்று இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் இருவரும் 15 கோடி ரூபாய்க்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், கம்மின்ஸ் 20.50 கோடிக்கும், டார்க் 24.75 கோடிக்கு ஏலம் போய் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் ரச்சின் ரவீந்தரா அதிக விலைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்க அவரோ 1.80 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வாகி இருக்கிறார். 20 கோடி ரூபாய்க்கு கூட ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெரால்ட் கோட்சி, மும்பை அணியால் 5 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறார். அதே சமயத்தில் அல்சாரி ஜோசப் ஆர்சிபி அணியால் 11 கோடி தாண்டி வாங்கப்பட்டு இருக்கிறார்.

இன்னொரு பக்கத்தில் அன்கேப்டு இந்திய இளம் வீரர்கள் சமீர் ரிஸ்வி 8.20 கோடிக்கும், ஜார்க்கண்ட் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குமார் குஷ்கரா டெல்லிக்கு 7.20 கோடிக்கும் ஏலத்திற்கு போய் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் எப்படியும் ஏலத்தில் போய்விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டு நட்சத்திர வீரர்களை, 10 ஐபிஎல் அணிகளும் கண்டு கொள்ளாமல் விட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இதில் இரண்டு துறைகளை கவனித்துக் கொள்ளும் முக்கிய வீரர்கள் கூட இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் இந்த மாதிரி ஐபிஎல் தொடரில் ஏலம் போகாதது ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி இந்த முறை ஏலத்தில் போகாத வெளிநாட்டு பிரபல பார்த்து வீரர்கள் யார் என்று இந்தச் சிறிய தொகுப்பில் பார்க்கலாம்.

ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா
ஜோஸ் இங்லீஷ் ஆஸ்திரேலியா
ஜோஸ் ஹேசில்வுட் ஆஸ்திரேலியா
ராசி வான்டர் டேசன் சவுத் ஆப்பிரிக்கா
ஜிம்மி நீசம் நியூசிலாந்து
ஆதில் ரஷீத் இங்கிலாந்து
தம்ப்ரைஸ் சம்சி சவுத் ஆப்பிரிக்கா
பின் ஆலன் நியூசிலாந்து
டைமால் மில்ஸ் இங்கிலாந்து
பில் சால்ட் இங்கிலாந்து