ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது ஒன்பது போட்டிகளில் சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் தோல்வியைத் தழுவி வெறும் 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
இனி சிஎஸ்கே அணி எஞ்சியிருக்கும் 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். இந்த நிலையில் சிஎஸ்கே அணி வீரர்களை கடுமையாக தாக்கி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் விமர்சித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சில சமயம் இது போன்ற நீண்ட தொடரில் விளையாட்டும் போது வீரர்களுக்கு பாதியில் செல்ல வேண்டும் என்று தோன்றும்.
வீட்டுக்கு போக நினைக்கிறார்கள்:
எனக்கு என்னவோ சிஎஸ்கே வீரர்களுக்கும் அதே போல் தான் எண்ணம் வந்திருக்கும். சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் விளையாடுவதை பார்த்தால் நாம் எப்போதுதான் வீட்டுக்கு போவோம் என்று நினைக்கிறார்கள் என தோன்றுகிறது. எப்போதுதான் இந்தத் தொடர் முடியும் என்று நினைப்பு அவர்களுக்கு தோன்றிவிட்டது.
சிஎஸ்கே அணியில் ஏதேனும் ஒரு வீரராவது பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாடி இருக்க வேண்டும். ஜடேஜாவின் ஸ்ட்ரைக் ரேட் பயனற்ற வகையில் சிஎஸ்கே அணிக்கு இருந்தாலும், குறைந்தபட்சம் அவர் 15 அல்லது 18 வது ஒவர் வரை நிற்க வேண்டும் என்று எண்ணத்தில் விளையாடுகிறார்.
சாம் கரணுக்கு ஏன் 3வது இடம்:
எதற்காக சாம் கரன் நம்பர் மூன்றாவது வீரராக களமிறங்குகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஐல்டி20 தொடரில் ஷாம்கரன் நான்காவது வீரரா விளையாடி புத்திசாலித்தனமாக ரன்களை சேர்த்து இருக்கிறார். ஆனால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் அவருக்கு மூன்றாவது இடம் தேவை இல்லை.சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராக பிரேவீஸ் தான் களமிறங்க வேண்டும்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. எஞ்சி இருக்கும் 5 போட்டிகளில் சிஎஸ்கே அணி என்ன செய்ய வேண்டும்?
நான்காவது வீரராக சிவம் துபேவையும், ஐந்தாவது இடத்தில் ஜடேஜா, ஆறாவது இடத்தில் தோனி, ஏழாம் இடத்தில் ஷாம் கரன் என்று பேட்டிங் வரிசை அமைந்திருக்க வேண்டும்.ருதுராஜ் கெய்க்வாட்டை சிஎஸ்கே அணி மிஸ் செய்கிறது. ஏனென்றால் அந்த பேட்டிங் வரிசையில் தொடர்ந்து ரன்குவிக்கும் ஒரு வீரராக அவர் மட்டும்தான் இருந்தார் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.






