ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் இருந்து தோனியை சேவாக் கடுமையாக விமர்சித்து வந்தார்.
தோனி ஏற்கனவே ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை எல்லாம் அவர் கூறியிருந்தார்ம் இந்த சூழலில் தோனி கேப்டனாக மீண்டும் பதவி ஏற்றுள்ள சூழ்நிலையில் ஷேவாக், டோனிக்கு ஆதரவாக பேசியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இது குறித்து பேசிய அவர், கே கே ஆர் அணி விளையாடும் கிரிக்கெட்டை சென்னை அணி தற்போதைய சீசனில் விளையாடவில்லை. எனவே இன்றைய போட்டியில் கேகேஆர் வெற்றி பெறவை வாய்ப்பு இருப்பதாக தோன்றுகிறது. ஏனென்றால் கொல்கத்தா அணியில் தலைசிறந்த சுழற் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
சுழற் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்களும் உள்ளனர். சென்னை அணியின் பேட்டிங் நடப்பு சீசனில் ஜொலிக்கவில்லை. ஒருவேளை பேட்டிங் என்று க்ளிக் ஆனால் இன்றைய ஆட்டத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இல்லையென்றால் கொல்கத்தா அணி தான் வெற்றி பெறும்.
ரசிகர்கள் தற்போது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஓவருக்கு 24, 25 ரன்கள் அடிக்க வேண்டும் என்றால் மக்கள் அதிக அளவு மைதானத்தை விட்டு வெளியேறியதையெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம்.ஆனால் தற்போது தோனி பேட்டிங் செய்ய வருகிறார் என்றால் மக்கள் நம்பிக்கையுடன் அமர்ந்து பார்க்கிறார்கள்.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடருக்கு போட்டியாக பிஎஸ்எல் தொடர்.. இந்தியாவின் எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்? அணிகள் விவரம்
முடியவே முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் உள்ள வார்த்தை. தோனி களத்தில் நின்றால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சேவாக் கூறியுள்ளார். சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒன்பது போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இதில் 7 போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால், பிளே ஆப்க்கு தகுதி பெற முடியும். 2023 குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியை கடைசி முறையாக கேப்டன் தோனி தலைமை தாங்கினார். தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் கேப்டன் பொறுப்பை அவர் ஏற்கிறார்.