ஐபிஎல் 2025.. ஆர்சிபி அணியில் ஸ்கேம் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் அதிரடி நீக்கம்.. மாற்று வீரராக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சேர்ப்பு

0
38

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி சொந்த மண்ணில் விளையாடிய 3 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் ஆர் சி பி அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் 8 புள்ளிகள் இடம் பிடித்திருக்கிறது.

இந்த சூழலில் ஆர் சி பி அணியின் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் பெங்களூர் மைதானத்தில் அவர்களுக்கு ஏழாம் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் ஆர் சி பி அணியில் இங்கிலாந்து வீரர் லியான் லிவிங் ஸ்டோன் விளையாடி வருகிறார்.

- Advertisement -

ஸ்கேம் செய்த லிவிங்ஸ்டோன்:

அவரை எட்டு கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது. அதிரடி பேட்ஸ்மேன் சுழற் பந்துவீச்சாளர் என்ற பெருமையை லிவிங்ஸ்டோன் பெற்றிருந்தாலும் அண்மைக்காலமாக அவர் சரியாக விளையாடவில்லை. ஆர்சிபி அணி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வந்த நிலையில் லிவிங் ஸ்டோன் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

கொல்கத்தா அணிக்கு எதிராக 15 ரன்களும், சிஎஸ்கேவுக்கு எதிராக பத்து ரன்களும், குஜராத்துக்கு எதிராக 54 ரன்களும் லிவிங்ஸ்டோன் அடித்து இருந்தார். அதன் பிறகு மும்பைக்கு எதிராக ஜீரோ, டெல்லிக்கு எதிராக நான்கு, பஞ்சாப்புக்கு எதிராக நான்கு என தொடர்ந்து மூன்று போட்டிகளில் ஒற்றை இலக்கம் ரன்களில் அவர் ஆட்டம் இழந்து வருகிறார்.

- Advertisement -

மாற்று வீரர் யார்?:

இதனால் இன்றைய ஆட்டத்தில் லிவிங்ஸ்டோன் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இந்த தொடரில் லிவிங்ஸ்டோன் ஒரு அரை சதம் அடித்து இருந்தாலும், மற்ற போட்டிகளில் தடுமாறி வந்ததால் அவருக்கு பதில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோமியோ செப்ஃபர்ட் ஆர்சிபி அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரோமியோ, இதுவரை ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

இதையும் படிங்க: நானே சொல்றேன்.. சேப்பாக்கத்தில் நடக்கிறது வான்கடேவுல நடக்காது.. தோனி இழுத்திடுவார் – ஹர்திக் பாண்டியா பேச்சு

பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள ரோமரியோ செப்பர்ட்  பேட்டிங்கில் மொத்தமாக 115 ரன்கள் அடித்திருக்கிறார். பஞ்சாப் அணிக்கு எதிராக அண்மையில் தான் ஆர்சிபி அணி சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் ஒருநாள் இடைவெளியில் தற்போது இரு அணிகளும் மீண்டும் மோதுகிறது. சந்திக்கரில் நடைபெறும் இந்த போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பந்து வீசி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -