ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், 9 அணிகளும் தங்களது சீசனில் புதிய கேப்டன் யார் என அறிவித்துவிட்டது.ஆனால் டெல்லி அணிதான் புதிய கேப்டனை அறிவிக்காமல் குழப்பத்தில் இருக்கிறது.
டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட், செயல்பட்ட நிலையில் தற்போது அவர் அந்த அணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லக்னோ அணிக்கு சென்று விட்டார்.இதனால் ரிஷப் பன்ட் இடத்திற்கு கே எல் ராகுலை தேர்வு செய்ய டெல்லி அணி முடிவு எடுத்திருந்தது. இதற்காக ஐபிஎல் மெகா ஏலத்தில் கேஎல் ராகுலை 14 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
இந்த சூழலில் தமக்கு கேப்டன் பதவி வேண்டாம் என ராகுல் மறுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது.கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் பெரிய வெற்றியை ஏதும் பெறவில்லை. மேலும் கே எல் ராகுலின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் திறனால் தான் அணி தோற்றதாக பலரும் குற்றம் சாட்டினர்.
இதனால் மனமுடைந்த ராகுல் நான் அனைத்து வெறும் பேட்ஸ்மேனாக இருந்து செயல்பட விரும்புகிறேன் என தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள “கே எல் ராகுல், எனக்கு ஒரு விஷயத்தை தாருங்கள் என்று நான் யாரிடமும் சென்று கேட்க மாட்டேன் நான் நல்ல முறையில் விளையாடுகிறேன்.”
“அணியை சரியாக வழி நடத்துகிறேன். அணியின் வெற்றிக்கு சிறந்த முறையில் பங்காற்றுகிறேன். நான் கேப்டனாக சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்பட்டால், அந்தப் பணியை நான் தொடர்வதில் ஒரு நியாயம் இருக்கின்றது.
எனக்கு கேப்டன் பதவி தான் வேண்டும் என்று என்பதெல்லாம் இல்லை. அணியில் ஒரு அங்கமாக இருந்தாலே எனக்கு போதும்.”
இதையும் படிங்க: ரோகித் தூய தங்கம்தான்.. ஆனா டிராவிட் செஞ்ச இத செய்யலனா வெளியதான் போகணும் – ஆகாஷ் சோப்ரா கருத்து
“ஒரு அணியில் இருக்கும் போது நாம் மகிழ்ச்சியாகவும், நாம் நல்ல சூழலில் இருக்கின்றோம் என்ற தோன்ற வேண்டும். அனைவரும் வெற்றிக்காக ஒருங்கிணைந்து பயணிக்கின்றோம் என்ற நினைப்பிருக்க வேண்டும்.அப்படி ஒரு அணி இருந்தால் எனக்கு போதும்” என்று ராகுல் கூறியிருக்கிறார். இந்த நிலையில் ராகுல் கேப்டன் பதவி வேண்டாம் எனக் கூறிவிட்டதால் தற்போது அக்சர் பட்டேலை புதிய கேப்டனாக நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.