ஐபிஎல் 2025 ஏலம்: 8 விதிகள்.. 120 கோடி.. 6 பேர்.. வெளிநாட்டு வீரர்களுக்கு புது தடை.. முழு பட்டியல்

0
90
Ipl 2025

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 2025 சீசனுக்கான தக்க வைப்பு வீரர்களின் விவரம் மற்றும் புதிய விதிகள் உள்ளிட்ட முக்கிய சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடத்தக்க விஷயமாக ஒரு வீரர் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட பிறகு விளையாடாமல் வெளியேறும் நிலையில் அதற்கும் தற்போது ஐபிஎல் நிர்வாகம் சரியான கிடுக்குப்பிடி அமைத்து இருக்கிறது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எட்டு முக்கிய நிபந்தனைகளை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதில் முதல் விதியாக ஒரு ஐபிஎல் அணி அதிகபட்சமாக தங்கள் அணியில் இருந்து ஆறு வீரர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதை தக்கவைப்பு அல்லது ஆர்டிஎம் கார்டு மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இரண்டாவதாக ஒரு ஐபிஎல் அணியை தக்கவைக்கும் 6 வீரர்களில் ஒரு வீரர் கண்டிப்பாக அன் கேப்டு பிளேயராக இருக்க வேண்டும். அதிகபட்சம் இரண்டு வீரர்களாக எடுத்துக் கொள்ளலாம். எனவே மீதம் நான்கு அல்லது ஐந்து வீரர்களில் கேப்டு பிளேயர்களாக இருப்பது அவசியம். மூன்றாவதாக ஐபிஎல் 2025ல் உரிமையாளர்களுக்கான ஏல தொகையாக 120 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போட்டி கட்டணம் மற்றும் ஏலத் தொகை உள்ளிட்ட விபரங்களை கொண்டிருக்கும். 2010ஆம் ஆண்டு இது 110 கோடியாக இருந்தது.

- Advertisement -

நான்காவதாக ஐபிஎல் வரலாற்றில் இந்த ஆண்டு முதல் முறையாக வீரர்களுக்கு போட்டி கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அதாவது ஒரு வீரர் ஒரு போட்டியில் 7.5 லட்ச ரூபாயை போட்டி கட்டணமாக பெற்றுக் கொள்ளலாம். இது அவரது ஒப்பந்த தொகையை விட பெறும் கூடுதல் தொகையாகும். ஐந்தாவது நிபந்தனையாக எந்த ஒரு வெளிநாட்டு வீரரும் ஒரு பெரிய ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்ய வேண்டும். அவர் பதிவு செய்ய தவறும் பட்சத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஏலத்தில் அவர் பதிவு செய்ய தகுதியற்ற நபராக மாறுவார்.

ஆறாவதாக ஒரு வீரர் ஏலத்தில் பதிவு செய்து ஒரு அணி அவரை தேர்வு செய்த பிறகு, அவர் அந்த அணிக்காக விளையாடாமல் வெளியேறினால் அடுத்த இரண்டு சீசன்களில் அவர் விளையாடவோ அல்லது ஏலத்தில் கலந்து கொள்ளவோ அவருக்கு அனுமதி அளிக்கப்படாது. ஏழாவதாக சம்பந்தப்பட்ட சீசன் நடைபெறுவதற்கு முன்னதாக ஐந்து காலண்டர் ஆண்டுகளில் ஒரு சர்வதேச வீரர் விளையாடாமல் இருந்தால் கேப்ட் பிளேயர் அண்ட் கேப்ட்டு பிளேயர் ஆக மாறுவார்.

இதையும் படிங்க:

எட்டாவது நிபந்தனையாக இம்பாக்ட் பிளேயர் என்னும் விதி 2025 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு முறை சுழற்சி முறையில் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -