ஐபிஎல் 2025.. பஞ்சாப் அணியில் இந்த மாற்றத்தை செய்யனும்.. பொறுப்பை உணர்ந்து மேக்ஸ்வெல் ஆடனும்.. ஆகாஷ் சோப்ரா

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இரண்டு புள்ளிகளை பெற்றிருக்கிறது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் மற்றும் தனது கேப்டன்சி திறமையால் பல புதிய ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்..

- Advertisement -

இந்த நிலையில் பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருக்கும் மேக்ஸ்வெல் குறித்து ஆகாஷ் சோப்ரா சில விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கூட மேக்ஸ்வெல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இன்று லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு விஷயம் மட்டும் பார்க்க ஆவலாக இருக்கின்றது.

யாருக்கு தெரியும்:

அது என்னவென்றால் மேக்ஸ்வெல் தான்.  இன்றைய ஆட்டத்தில் அவர் எப்படி விளையாடுவார் என்பது தான். ஏனென்றால் மேக்ஸ்வெல் எப்படி ஆடுவார் என்று யாருக்கும் தெரியாது என்று சிக்சர் அடிப்பாரா மாட்டாரா என்று யாருக்கு தெரியும். அதுதான் மேக்ஸ்வெல். ஒரு போட்டியில் டக் அவுட் ஆகலாம்.

அடுத்த போட்டியில் ரன்களும் அடிக்கலாம். கடந்த போட்டியில் அவர் டிஆர்எஸ் முடிவை எடுத்து இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஏனென்றால் அது மிகப்பெரிய மோசமான சாட்டாக நான் பார்க்கின்றேன். அதேபோன்று அஸ்மதுல்லா ஓமர்சாய் மற்றும் மார்கோ ஜான்சன் என இரண்டு வீரர்களில் ஒருவரை நீங்கள் வெளியே அமர வைக்க வேண்டும்.

- Advertisement -

நம்பிக்கையை காப்பாற்றுங்க:

ஒரு பேட்ஸ்மேன் தேவை என்பதெல்லாம் அஸ்மதுல்லாவை களத்தில் முன் வரிசையில் களம் இறக்கினார்கள். அவர் இல்லை என்றால் மேக்ஸ்வெல் மீதான பொறுப்பு மேலும் அதிகரிக்கும். இதேபோன்று பிராப்சிம்ரன்சிங் உள்ளிட்டு வரும் டாப் வரிசையில் ரன்குவிக்க வேண்டும்.

இதையும் படிங்க: 2027 உலககோப்பை வரை விளையாடுவேன்.. அது தான் என் குறிக்கோள்.. விராட் கோலி கருத்து

பஞ்சாப் அணி தக்க வைத்த வீரர்களின் பிராப்சிம்ரன் சிங்கும்  ஒருவர். இதனால் அந்த அணி வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் காப்பாற்ற வேண்டும். இதன் மூலம் பஞ்சாப் அணியின் வேகப்பந்துவீச்சும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதனால் அஸ்மத்துல்லாஹ் மற்றும் மார்கோ யான்சன் என இரண்டு பேரையும் விளையாட வைக்கலாமா இல்லை ஒருவரை வைத்து விட்டு நோக்கி சென்று அணிக்கும் கொண்டு வரலாமா என்பது குறித்து பஞ்சாப் அணி யோசிக்கும்.
அஹ்மத்துல்லா மற்றும் மார்கோ யான்சன் என இருவருமே நன்றாக பேட்டிங் செய்வார்கள். இதன் மூலம் பேட்டிங் பலமும் அதிகரிக்கும். ஆர்ஸ்தீப் நன்றாக பந்து வீசி வருகிறார். அவர் இம்முறை கவனத்தை ஈர்ப்பார் என்று ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Published by

Recent Posts