ஐபிஎல் 2024 ஏலம் முடிவு.. சிஎஸ்கே வீரர்கள் முழுபட்டியல்.. 6வது கப் தோனி கையில்?!

0
12040
CSK

2024 17வது ஐபிஎல் சீசனுக்கான ஐபிஎல் மினி ஏலம் தற்பொழுது துபாயில் வைத்து நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது.

எப்பொழுதும் போலவே எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலக்குழு மிகச் சிறப்பாக செயல்பட்டு, சிறந்த வீரர்களை வாங்கி, குறிப்பாக சரியான விலைக்கு வாங்கி, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

- Advertisement -

நடந்து முடிந்த ஏலத்தில் நியூசிலாந்தின் இளம் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்தராவை 1.80 கோடிக்கு வாங்கியது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் சர்துல் தாகூரை 4 கோடிக்கு தொடர்ந்து குறைந்த விலைக்கு கிடைக்க, இந்த இரண்டு வீரர்களில் மீதியான பணத்தைக் கொண்டு அதிரடியாக சென்று, டேரில் மிட்சலை 14 கோடிக்கு வாங்கி அசத்தியது.

அதே சமயத்தில் எப்பொழுதும் அனுபவ வீரர்களின் மேல் முதலீடு செய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், இந்த முறை புதிய அணுகுமுறை உடன், 20 வயதான உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அதிரடி இளம் பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வியை எட்டு கோடிக்கு மேல் கொடுத்து எடுத்து ஆச்சரியப்படுத்தியது. அம்பதி ராயுடுக்கான இடத்தை நிரப்ப சென்னை சூப்பர் கிங்ஸ் முழுவதுமாக இன்று ஏலத்தில் செயல்பட்டது.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக இன்றைய ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. எல்லோரும் அதுக்கு கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு புதிய வீரர்களை வாங்கியிருந்தாலும், அவர்கள் எல்லோருமே அந்தந்த இடங்களுக்கு சரியானவர்களாக இருக்கிறார்கள். தற்பொழுது மொத்தம் 25 வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பகுதிவாரியாக பார்க்கலாம்.

பேட்ஸ்மேன்கள் :
ருத்ராஜ், ரகானே, ஷேக் ரஷீத், சமீர் ரிஸ்வி, விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் மகேந்திர சிங் தோனி, விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் டெவோன் கான்வே.

ஆல் ரவுண்டர்கள் :
ரவீந்திர ஜடேஜா, மிட்சல் சான்ட்னர், மொயின் அலி, சிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்சல்.

பந்துவீச்சாளர்கள் :
ராஜ்யவர்தன் ஹங்கர்கேகர், தீபக் சகர், மதிஷா தீக்ஷனா, மதிஷா பத்திரனா, முகேஷ் சௌத்திரி, முஸ்தஃபிஸூர் ரகமான், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜித் சிங், துஷார் தேஷ்பாண்டே, சர்துல் தாக்கூர் மற்றும் அவினாஷ் ராவ் ஆரவலி.

- Advertisement -