இந்திய வீரர் அதான் இப்படி பேசுறேன்ன்னு.. நான் ஹர்திக் பாண்டியாவை பற்றி பேசியதை தப்பா புரிஞ்சுக்கிடீங்க… சக கிரிக்கெட் வீரராக சொல்கிறேன், அவர் 2 விஷயங்களை மாத்திக்கணும் – முன்னாள் பாகிஸ்தான் வீரர் பேட்டி!

0
165

நான் ஹர்திக் பாண்டியாவைப் பற்றி பேசியதை அனைவரும் தவறாக புரிந்து கொண்டார்கள். நான் அவரது வளர்ச்சிக்காகவே பேசினேன் தனிப்பட்ட காழ்புணர்ச்சி ஒன்றும் இல்லை என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் அப்துல் ரசாக்.

பாகிஸ்தான் அணியின் லெஜெண்ட் மற்றும் முன்னாள் ஆல்ரவுண்ட் அப்துல் ரசாக், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹர்திக் பாண்டியா பற்றி பகிரங்கமான கருத்தை முன்வைத்தார். அதில், “ஹர்திக் பாண்டியா ஒருபோதும் கபில் தேவுக்கு இணையாக வர முடியாது. அவரிடம் அப்படிப்பட்ட அசாத்தியமான திறமைகள் இல்லை.” என்று கூறினார்.

- Advertisement -

தனது சமீபத்திய பேட்டியில் அப்துல் ரசாக் கூறியபோது, “நான் ஹர்திக் பாண்டியாவின் வளர்ச்சிக்காகவும் அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அப்படி சொன்னேன். பலரும் அதை தவறாக புரிந்துகொண்டு சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்து விட்டனர். சக கிரிக்கெட் வீரர் என்பதற்காகவே நான் இந்த விமர்சனத்தை முன் வைத்தேன். ஆனால் அவர் இந்திய வீரர், அதனால் தான் அப்படி நான் கூறுகிறேன் என பலரும் மடைமாற்றம் செய்து விட்டனர்.”

“ஹர்திக் பாண்டியாவிடம் இருக்கும் சிறப்பான விஷயம் அவரின் மனநிலை மற்றும் உடல்தகுதி. நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். பவுலிங் கொடுத்தால் விக்கெட்டுகள் எடுத்துக் கொடுக்கிறார். பேட்டிங் இறக்கினால், தேவையான ரன்கள் அடித்துக் கொடுக்கிறார். அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.”

“எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் 100% சரியானவராக இருக்கமாட்டர். சில விஷயங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது வரும். அந்த வகையில் ஹார்திக் பாண்டியாவின் பேட்டிங் அணுகு முறையில் கால்களை நகர்த்துவது மற்றும் பந்துகளை கணிப்பது என இரண்டு விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். பந்துகளை கணிக்காமல் அடிக்க சென்றுவிடுகிறார். இந்த தவறு இந்திய அணிக்கு பின்னடைவை தந்திருக்கிறது. ஹர்திக் பாண்டியாவை நான் விமர்சிக்கிறேன் என நினைக்க வேண்டாம். கடந்த காலங்களில் இம்ரான் கான், வாசிம் அக்ரம், கபில் தேவ் ஆகியோருக்கும் சில பிரச்சனைகள் இருந்திருக்கிறது. எவரும் முழுமையாக சரியான வீரராக இருக்க முடியாது. ஆனால் தங்களிடம் இருக்கும் திறமையை வைத்து வளர்ந்து தற்போது தலைசிறந்த ஜாம்பவான்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

அந்த பண்பை ஹர்திக் பாண்டியா வளர்த்துக் கொண்டு தலைசிறந்த வீரர்களில் ஒருவராக வரவேண்டும். கடந்த காலங்களில் அவருக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தன. அதை வைத்து தான் அவரால் கபில் தேவுக்கு இணையாக வருவது கடினம் என்று நான் விமர்சித்தேன். தனிப்பட்ட தாக்குதல் எதுவும் அதில் இல்லை. மீண்டும் ஒருமுறை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்.