ஐபிஎல் 2008 முதல் 2023 வரை வின்னர் மற்றும் ரன்னருக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை ; முழு விபரம் உள்ளே!

0
555
IPL

2008 ஆம் ஆண்டு இந்தியக் கிரிக்கெட் வாரியத்தால் ஐபிஎல் டி20 தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாக ஆரம்பித்தது!

ஐசிசி நடத்தும் தொடர்களை விட இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் வீரர்களின் சம்பளத்தில் இருந்து, போட்டிகளை எந்தவித சிக்கல்களும் இல்லாமல் சீராக நடத்துவது வரை மிகப் பெரிய உயரத்தில் இருக்கிறது!

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கி உள்ள இந்திய முதலாளிகள் வெஸ்ட் இண்டீஸ், சவுத் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக்குகளிலும் அணிகளை வாங்கி வைத்திருக்கிறார்கள்.

உலக கிரிக்கெட் ஒருபக்கமாக சுருங்கி இந்தியாவின் பக்கம் வருவதைப் போலவே, உலகின் டி20 லீக்குகள் இந்திய முதலாளிகளின் பக்கமாகச் சுருங்கி வருகிறது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் வீரருமான கெவின் பீட்டர்சன் தன்னுடைய ட்வீட்டில் ” சர்வதேச கிரிக்கெட் அழிந்து கிளப் கிரிக்கெட்தான் இனி இருக்கும்; இந்த பதிவை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மாறி இருக்கிறது.

- Advertisement -

இப்படி உலகக் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடரில், 2008ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை வின்னர் மற்றும் ரன்னருக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை எவ்வளவு? என்று இந்தச் சிறிய கட்டுரையில் பார்ப்போம்.

2008 – 2009 – வின்னர் 4.8 கோடி – ரன்னர் 2.4கோடி

2010 – 2013 – 10 கோடி – 5 கோடி

2014 – 2015 – 15 கோடி – 10 கோடி

2017 2019 – 20 கோடி – 11 கோடி

2020 – 10 கோடி – 6.5 கோடி ( கொரோனா காரணமாகக் குறைக்கப்பட்டது )

2021 – 20 கோடி – 12.5 கோடி

2022 – 2023 – 20 கோடி – 13 கோடி