ஐபிஎல் 2024

நாங்க சும்மா திரும்பி வரல.. எங்க டீம் ஜெயிக்கிறதுக்கு இந்த ரெண்டு விஷயம் முக்கிய காரணமா இருக்கு – அஸ்வின் பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணியை வென்று இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இந்த போட்டியில் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்று, வெற்றிக்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 200 ரன்களை தொடுவதற்கான இடத்தில் இருந்த பொழுது, சிறப்பாக விளையாடிய கேமரூன் கிரீன் மற்றும் மேக்ஸ்வெல் இருவரையும் ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்தடுத்து வெளியேற்றி பெரிய திருப்புமுனையை ராஜஸ்தான் அணிக்கு உண்டாக்கினார்.

மேலும் இந்த தொடர் முழுக்க ஸ்பின்னர்களை சிக்ஸர்களாக அடித்து நொறுக்கி மிடில் ஓவர்களில் ஆர்சிபி அணிக்கு பெரிய தாக்கத்தை உண்டாக்கிய ரஜத் பட்டிதாருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தை அடிப்பதற்கு வெளியில் கொடுக்கவே இல்லை. இன்று நான்கு ஓவர்களில் அவர் 19 ரன்கள் மட்டுமே தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். மேலும் ராஜஸ்தான் அணி இலக்கை எட்டி 19 ஓவர்களில் இலக்கையை எட்டி அவ்வாறு வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பின் ஆட்டநாயகன் விருது பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “கடந்த சில ஆட்டங்களில் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. நாங்கள் ஆடுகளத்திற்கு தேவையான ரன்களை எடுக்கவில்லை. பட்லர் நாடு திரும்பியிருந்தார் காயத்தின் காரணமாக ஹெட்மையர் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம். இன்று துரத்தும் பொழுது கொஞ்சம் பிரச்சனை இருந்தாலும் இந்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் நான் வயிற்றுப் பகுதியில் காயமடைந்து சரியாக இல்லை. என் உடல் சரியாக நகராத காரணத்தினால் எனக்கு நல்ல ரிதம் பந்து வீச்சில் இல்லை. எனக்கும் வயதாகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நேரடியாக வந்து உடனடியாக இந்த வடிவத்திற்கு மாற முடியவில்லை. கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. ஆனால் நீங்கள் அணிக்கு விளையாடுவதாக வந்ததும், முழு சீசனும் விளையாட விரும்புகிறீர்கள். இன்று சரியான லென்த் அடித்தோம். போல்டுக்கு கொஞ்சம் ஸ்விங் மற்றும் சீம் கிடைத்தது.

இதையும் படிங்க : இவங்க ரெண்டு பேர் ஹோட்டல் ரூம்ல கூட பிளான் போட்டாங்க.. வெற்றிக்கு காரணம் இதுதான் – சஞ்சு சாம்சன் பேட்டி

மேலும் இரண்டாவது இன்னிங்ஸ் போது அதிக பனியும் வரவில்லை. ஆனாலும் ரன் துரத்தும் பொழுது எங்கள் பேட்ஸ்மேன்கள் சில அசத்தலான ஷாட் விளையாடினார்கள். எங்களின் மிகப்பெரிய பலம் இளமையின் உற்சாகமும், அதைசப்போர்ட் செய்யும் அனுபவமும்தான் என்று நினைக்கிறேன். அணி முன்னோக்கி செல்வதற்கான வேகம் எங்களிடம் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

Published by