இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
நேற்று இந்த தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் கேஎல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக தோற்கடித்தது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என்கின்ற காரணத்தினால் நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரை வெல்லும். தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்று ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இழந்த கேஎல்.ராகுலுக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பானதாக அமையும்.
மேலும் முதலில் நடைபெற்ற டி20 தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமனில் முடிந்தது. எனவே இந்த சுற்றுப்பயணத்தில் இன்னும் எந்த அணியும் தொடரை இழக்கவில்லை. இந்தத் தொடரை கைப்பற்றும் பட்சத்தில் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக இந்திய அணி ஆரம்பிக்க முடியும்.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டெஸ்ட் அணியுடன் இணைந்து தயாராவதற்கு கிளம்புகிறார். எனவே அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் இருக்க மாட்டார். தற்போது இவருடைய இடத்தில் விளையாடுவது ரிங்கு சிங்கா இல்லை ரஜத் பட்டிதாரா? என்பதுதான் முக்கிய கேள்வியாக இருக்கிறது.
நேற்றைய போட்டிக்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி இருந்த கேஎல்.ராகுல் ரிங்கு சிங்குக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் சஞ்சு சாம்சன் உள்ளே விளையாடுகின்ற காரணத்தினால் வாய்ப்பு தர முடியவில்லை.
எனவே நாளைய போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் ரிங் அணிக்குள் வருவதற்கு 99 சதவீத வாய்ப்புகள் இருக்கிறது. நாளைய போட்டியை இந்திய அணி வென்றால், சம்பிரதாயமாக நடக்கும் மூன்றாவது போட்டியில் ரஜத் பட்டிதார் போன்று வாய்ப்பு கிடைக்காதவர்கள் விளையாடலாம்.
நாளைய போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன்:
ருதுராஜ், சாய் சுதர்ஷன், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், கேஎல்.ராகுல், ரிங்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார்.