INDvsENG.. இந்திய அணியின் துணை கேப்டன்.. தேர்வுக்குழு எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

0
255
Bumrah

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமான ஒரு தொடராக அமைந்திருக்கிறது

இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகள் விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே தற்பொழுது வருமான ரீதியாகவும் ரசிகர்களின் ஆதரவு ரீதியாகவும் வரவேற்பு இருந்து வருகிறது.

- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இந்தத் தொடருக்கு வெகு நாட்களுக்கு முன்பே அணியை அறிவித்து பயிற்சியையும் ஆரம்பித்து இருக்கிறது. இளம் சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு இந்தியா வரவிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று 16 பேர் கொண்ட இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரால் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அறிவிக்கப்பட்ட இந்த அணியில் காயம் காரணமாக முகமது சமி இடம் பெறவில்லை. ஓய்வு கேட்டு வாங்கி இருந்த இசான் கிசானையும் இந்திய தேர்வுக்குழு பரிசீலனை செய்யவில்லை. இது ஒழுங்கு நடவடிக்கையா? என்று இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

அதே சமயத்தில் இஷான் கிஷான் இடத்துக்கு 22 வயதான இளம் வலது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் உத்தர பிரதேசத்தை சேர்ந்த துருவ் ஜுரல் அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வெளியில் அடையாளம் காணப்பட்டார்.

மேலும் ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரவீந்திர ஜடேஜா இல்லை கேஎல்.ராகுல் இருவரில் ஒருவர் துணைக் கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்வுக்குழு அதிரடியாக 30 வயதான வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவை துணை கேப்டனாக அறிவித்திருக்கிறது. கடந்த முறை இங்கிலாந்துக்கு ஒரு டெஸ்ட் விளையாட சென்ற பொழுது ரோகித் சர்மா பங்கேற்க முடியாததால் பும்ரா கேப்டனாக வழி நடத்தி இருந்தார்.

மேலும் ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்காலத்தில் வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை பும்ரா வழி நடத்தலாம் என்பது, ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது!

- Advertisement -