INDvsAUS.. நாளை வலிமையான இந்திய பிளேயிங் லெவன்.. ருதுராஜா? ஜெய்ஸ்வாலா?.. முழு தகவல்கள்!

0
3439
ICT

நாளை இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. உலகக் கோப்பை விளையாட வந்த ஆஸ்திரேலியா அணி இன்று தங்கி விட்டது. சில முக்கியமான வீரர்கள் நாடு திரும்பி இருக்கிறார்கள்.

இந்த டி20 தொடரில் பங்கேற்க இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் கேப்டனாக தலைமை தாங்கி அணியை வழி நடத்துகிறார். இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

நாளை நவம்பர் 23ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துவங்கும் முதல் போட்டியுடன் ஆரம்பமாகும் இந்த டி20 தொடர், இறுதியாக டிசம்பர் மூன்றாம் தேதி ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறும் ஐந்தாவது போட்டியுடன் முடிவுக்கு வருகிறது.

2024 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்குத் தயாராவதற்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இது மிகவும் முக்கியமான டி20 தொடராகும். அணியில் விளையாடும் வீரர்களை மட்டும் இல்லாமல், பெஞ்சில் அமர வைப்பதற்கான வீரர்களையும் கண்டறிய வேண்டிய தேவை இருக்கிறது.

மேலும் இந்திய அணியை பொருத்தவரை கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் மூவரும் இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்படுவார்களா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. எனவே நிறைய இளம் வீரர்கள் உள்வாங்கப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியில் ருதுராஜ், திலக் வர்மா, ரிங்கு சிங் ஜெய்ஸ்வால், சிவம் துபே, விக்கெட் கீப்பர் ஜிகேஷ் சர்மா ஆகிய இளம் வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். எனவே இவர்களுக்கான வாய்ப்பை வழங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனாலும் ஜெயஸ்வால் இடத்தில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் விளையாடுவார் என்று தெரிகிறது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ருதுராஜ், இஷான் கிஷான், சூர்யா குமார் யாதவ், திலக் வர்மா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஸ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஸ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான்.