INDvsAUS.. உடனே மறக்க முடியாது.. நாளை போட்டிக்கு காத்துகிட்டு இருக்கோம் – கேப்டன் சூரியகுமார் பேட்டி!

0
2010
Surya

2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளில் சேர்த்து நடத்தப்படுகிறது.

2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் தகுதிச்சுற்றில் தோல்வியடைந்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடாமல் வெளியே சென்றது. இந்தமுறை தொடரை நடத்துவதால் நேரடியாக வாய்ப்பு பெற்று இருக்கிறது.

- Advertisement -

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை முன்வைத்து, உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் அனைத்து அணிகளும் தங்கள் தயாரிப்புகளை ஆரம்பிக்க இருக்கின்றன.

இந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய டி20 கிரிக்கெட் அணி தயாரிப்பை மேற்கொள்வதற்கு உள்நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாட இருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடிய அனைவருக்குமே ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. சூரியகுமார் மட்டுமே டி20 தொடரில் கேப்டனாக விளையாடுகிறார்.

- Advertisement -

மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இழந்த அடுத்த மூன்று நான்கு நாட்களில் ஒரு சர்வதேச தொடரை உள்நாட்டில் எதிர்கொள்வது என்பது அவ்வளவு இலகுவான விஷயமாக இருக்காது.

இந்த நிலையில் நாளைய போட்டிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்த சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “இது ஒரு சிறிய ஏமாற்றம். வெளிப்படையாக எங்கள் உலகக் கோப்பை பயணத்தை திரும்பிப் பார்க்கும் பொழுது நாங்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம். இந்தியா முழுவதும் நாங்கள் வெளிப்படுத்திய திறமைக்கு பெருமை கொள்கிறோம். நாங்கள் விளையாடிய கிரிக்கெட் பிராண்ட் அதிரடியானது நம்பிக்கையானது அதற்கு பெருமைப்படுகிறோம்.

அதே சமயத்தில் ஒரு உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு அடுத்த நாள் எழுந்து அப்படியே மறந்து விட்டு இருந்து விட முடியாது. இது கடினமானதுதான். நாங்கள் உலக கோப்பையை வெல்ல விரும்பினோம். அதற்காக கடுமையாக உழைத்தோம்.

ஆனால் நடந்ததை மறந்து விட்டு நாங்கள் முன்னேற வேண்டும். இது ஒரு புதிய அணி, இளம் வீரர்கள் நிறைய இருக்கிறார்கள். இது புதிய ஆற்றலை கொண்டு இருக்கிறது. எனவே நாங்கள் இந்த டி20 தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!