நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மிகப்பெரிய போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்கு இந்திய அணியில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா? என்று பார்க்கலாம்.
இந்திய அணி தனது முதல் போட்டியில் யுஏஇ அணிக்கு எதிராக மூன்று பிரதான ஸ்பின்னர்களை வைத்து விளையாடியது. இதன் காரணமாக மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக சிவம் துபே இடம் பெற்றார். அர்ஸ்தீப் சிங்குக்கு ஆச்சரியப்படும் விதமாக விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் சேர்த்து 5 ஸ்பின்னர்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற கலவையுடன் விளையாடுகிறது. யுஏஇ கண்டிஷன் மற்றும் பெரிய மைதானங்கள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகத்தை கொடுக்கின்றன. எனவே இந்திய அணி தனது பிளேயிங் லெவனில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இந்திய பிளேயிங் லெவனில் மாற்றத்தை ஏற்படுத்தினால் குல்தீப் யாதவ் இடத்திற்கு அர்ஸ்தீப் சிங் கொண்டுவரப்படலாம். மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக அவர் கிடைத்தால், சிவம் துபே இடத்தில் பினிஷர் ரிங்கு சிங்கை விளையாடவும் வைக்கலாம். ஆனால் இந்த இரண்டு மாற்றத்திற்கும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்திய அணி தொடர்ந்து தனது பழைய பிளேயிங் லெவனில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் இரண்டு அணிகளும் ஏறக்குறைய பந்துவீச்சில் சமபலத்தில் இருக்கின்றன. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் அணியை விட பேட்டிங்கில் வெளிப்படையாக பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 20 ஓவர் 304 ரன்.. சூறையாடிய பில் சால்ட்.. 2 உலக சாதனையை படைத்த இங்கிலாந்து.. தெஆ பரிதாபம்
இந்திய பிளேயிங் XI : கில், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா.