ஆஸி 3வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. ஒரே கல்லில் 3 மாங்காய்.. கம்பீர் மாறியே ஆகணும்

0
512
Arshdeep

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கும் மூன்றாவது போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனில் என்ன மாதிரியான மாற்றம் செய்தால் சரியாக இருக்கும் என பார்க்கலாம்.

தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட, நேற்று இந்திய அணி மெல்போனில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அடைந்தது. எனவே நாளைய போட்டிகள் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா கண்டிஷன்

நேற்று மெல்போன் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு மிக சாதகமாக இருந்தது. ஆனால் இந்திய அணியில் இரண்டே வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருந்தார்கள். ஆனால் ஆஸ்திரேலியா தரப்பில் மிச்சல் ஓவன் உடன் சேர்த்து 5 பேர் வேகப்பந்துவீச்சாளர்களாக இருந்தார்கள்.

இந்திய அணி நிர்வாகமோ சரியான முறையில் யோசிக்காமல் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடியது. இது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. மேலும் பவர் பிளேவில் பவுலர்களை ரொட்டேட் செய்ய முடியாமலும், சரியான பவுலர் இல்லாமலும் தடுமாறியது.

- Advertisement -

இவரை நீக்க வேண்டும்

எனவே தற்போதைய இந்திய பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவை நீக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அவரை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு அர்ஸ்தீப்பை கொண்டு வர வேண்டும். இவர் வந்தால் பவர் பிளேவில் ஹர்சித் ராணா என்றால் பந்து வீச வேண்டி இருக்காது. அவருக்கு வசதியான மிடில் ஓவர்களில் வீச வைக்கலாம். மேலும் கடைசி கட்டத்தில் வீச அர்ஸ்தீப் கையில் ஓவர்களும் இருக்கும்.

மேலும் மூன்று சரியான வேகப்பந்துவீச்சாளர்கள் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் என அமைந்து விடுவதால், அணியில் ஏற்கனவே சுழல் பந்து வீச்சு வீசக்கூடிய அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா இருப்பதால், சிவம் துபே இடத்தில் பினிஷர் ரிங்கு சிங்கை விளையாட வைக்கலாம். எனவே ஒரு மாற்றத்தின் மூலமாக இப்படியான நிறைய சாதகங்கள் இந்திய அணிக்கு கிடைக்கும்.

இதையும் படிங்க : கம்பீர் ஏன் இந்த தப்பை தொடர்ந்து செஞ்சுட்டே வராரு.. பும்ராவின் இந்த பிரச்சனை எனக்கு புரியல – ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி

இந்திய பிளேயிங் XI : அபிஷேக் ஷர்மா, கில், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், சிவம் துபே, ஹர்ஷித் ராணா, அர்ஸ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் பும்ரா.

- Advertisement -