தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடர்பு முடிவடைந்ததும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது.
இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 9, 11, 14, 17, 19ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. மேலும் அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. எனவே இந்திய அணிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
தற்போது தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு கேப்டனாக சூரியகுமார் யாதவ் தொடர்கிறார். அதே சமயத்தில் துணை கேப்டனாக கில் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அணியில் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் காயமடைந்து வெளியேறி இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். மற்றபடி வழக்கமான வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இந்த அணியின் துணை கேப்டன் இன்னும் குணமடையவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் அவர் தொடர் ஆரம்பிப்பதற்குள் குணம் அடைய ஒரு வாய்ப்பு இருப்பதால் அணிக்குள் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர் விளையாடாவிட்டால் கூட சஞ்சு சாம்சன் துவக்க வீரராக விளையாட முடியும். மேலும் துவக்க இடத்திற்கு புதிய வீரர் யாரையும் கொண்டு வந்து குழப்பத்தை ஏற்படுத்த தேர்வுக்குழு விரும்பவில்லை என்று தெரிகிறது.
இதையும் படிங்க : கேப்டன் ராகுல் கீழ் மிருகம் போல் மாறிய விராட் கோலி.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மீண்டும் இமாலய இலக்கு.. ஆனால் இது போதுமா?
சூர்யா குமார் யாதவ்
சுப்மன் கில்
அபிஷேக் சர்மா
திலக் வர்மா
ஹார்டிக் பாண்ட்யா
சிவம் துபே
அக்சர் படேல்
ஜிதேஷ் ஷர்மா
சஞ்சா சாம்சன்
ஜஸ்பிரித் பும்ரா
வருண் சக்கரவர்த்தி
அர்ஷ்தீப் சிங்
குல்தீப் யாதவ்
ஹர்ஷித் ராணா
வாஷிங்டன் சுந்தர்