இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை காலை நடைபெற இருக்கிறது. இதற்காக இரண்டு அணிகளும் தற்போது தயார் நிலையில் இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் நாளை நடைபெற உள்ள முதல் போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வீரர்கள் முதல் போட்டியில் அறிமுகமாக இருக்கிறார்கள். ஆனால் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சோகம் நிகழ்ந்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில் முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பும்ரா கேப்டனாக பதவி வகிக்கும் 11 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோஹித் சர்மாவுக்கு குழந்தை பிறந்துள்ளதால் இந்த போட்டியில் விளையாடவில்லை. இந்த சூழ்நிலையில் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க உள்ளார்.
கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வரிசையில் களமிறங்க உள்ளனர். மூன்றாவது வரிசையில் தேவ்தத் படிக்கல் களம் இறங்க இருக்கிறார். கில் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது வரிசையில் விராட் கோலி களமிறங்க ஐந்தாவது மற்றும் ஆறாவது வரிசையில் ரிஷப் பண்ட் மற்றும் ஜூரேல் ஆகியோர் விளையாட இருக்கின்றனர்.
அறிவிக்கப்பட்ட இந்திய பிளேயிங் லெவன்
இதில் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இளம் வேகபந்து வீச்சு ஆல் ரவுண்டர் நித்திஷ் ரெட்டி தனது அறிமுகப் போட்டியில் களமிறங்க உள்ளார். அவருக்கு அடுத்ததாக வாஷிங்டன் சுந்தர் பக்கபலமாக இருக்கிறார். மேலும் பந்துவீச்சாளர்களை பொருத்தவரை இந்திய அணி மூன்று வேகப்பந்துவீச்சாளர்களோடு களமிறங்க உள்ளது. அதில் ஹர்ஷித் ராணா தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இதுக்கு முன்னாடி இப்படி நடக்கல.. வரலாறு படைக்க தயாராகும் பும்ரா மற்றும் கம்மின்ஸ்.. இந்தியா ஆஸி டெஸ்ட்.. முழு விபரம்
மேலும் சிராஜ் மற்றும் அணியின் கேப்டன் பும்ரா ஆகியோர் மற்ற இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களாக இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய அனுபவ வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 11 பேர் கொண்ட இந்திய அணி:
கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விகே), துருவ் ஜூரேல், நித்திஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா (கே).






