இந்திய கிரிக்கெட்

தோனி சாரின் அந்த விஷயத்தைதான் என் பொண்ணு செஞ்சா.. அதான் இந்திய அணி சாம்பியன்.. ஜெமிமாவின் தந்தை உருக்கம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வீராங்கனை ஜெமிமா குறித்து அவரது தந்தை சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்த போதிலும் இறுதிக்கட்டத்தில் கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. அதில் ஆஸ்திரேலியா அணி 338 ரன்கள் இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்த போதிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

அதில் மூன்றாவது வரிசையில் இறங்கிய வீராங்கனை ஜெமிமா ரோட்ரியஸ் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 127 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தது இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றியது. இந்த சூழ்நிலையில் அவரது தந்தை எம்எஸ் தோனியின் குண நலனை ஒப்பிட்டு சில கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். அதேபோல ஜெமிமாவின் கிரிக்கெட் அணுகுமுறை குறித்தும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் முழு தேசத்தையும் வாழ்த்த விரும்புகிறேன். இது இந்தியாவின் பெண்கள் கிரிக்கெட் ஒரு புதிய கட்டத்திற்கு செல்லும் ஒரு வழியாக அமைந்துள்ளது. நான் ஜெமிமாவின் அப்பா மற்றும் பயிற்சியாளராக இருக்கிறேன். பள்ளி நாட்களில் அவர் விளையாடவில்லை என்றால் நாங்கள் போட்டிகளில் தோற்று இருப்போம். ஆனால் அப்படி ஒருபோதும் நடந்தது கிடையாது. செயின்ட் ஜோசப் பள்ளி எப்போதுமே ஒரு சாம்பியனாக இருந்திருக்கிறது.

இதையும் படிங்க:இங்கிலாந்து கூட தோத்த பிறகு.. எங்க கோச் ஒன்னு சொன்னார்.. அங்கதான் எல்லாம் மாறுச்சு – ஹர்மன்பிரீத் கவுர் பேச்சு

கிரிக்கெட் மட்டுமல்ல ஹாக்கியிலும் அவர் சிறந்து விளங்கி இருக்கிறார். மும்பை கிரிக்கெட்டில் எல்லா பொறுப்புகளையும் அவர் சுமந்தார் நாங்கள் பெரிய மேடைக்காக காத்திருந்தோம். கடவுள் எங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார். நான் ஜெமிமாவிடம் ஒரே விஷயத்தை கூறினேன், மனப்பான்மை என்பது மிகவும் முக்கியம். தோனி சாரை போலவே அவரது அமைதி மற்றும் மீள் தன்மை மற்றும் அணுகுமுறை வெற்றிகளை பிரகாசமாக்குகின்றன. அவரது அணுகுமுறை உங்களிடம் இருந்தால் எந்த வகையான போட்டிகளையும் வெல்லலாம்” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by