இந்திய டெஸ்ட் தொடர்.. அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி.. 1 மாதத்துக்கு முன்பே அதிரடி!

0
464
England

தற்போது உலகக் கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் இதற்கு அடுத்து மிக முக்கிய தொடராக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் மோதிக் கொள்ளும் டெஸ்ட் தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

2023-2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆசஸ் தொடரில் 5 போட்டிகளில் விளையாடும் முடித்து இருக்கின்றன. இந்திய அணி இந்த தொடரை விளையாடும் பொழுது நான்கு டெஸ்ட் போட்டிகளை விளையாடி முடித்திருக்கும்.

- Advertisement -

எனவே இதன் காரணமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரண்டு அணிகளுக்குமே இந்த டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு மிக மிக முக்கியமான தொடராக அமைகிறது.

மேலும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி மெக்கலம் பயிற்சியில், பென் ஸ்டோக்ஸ் கேப்டன்ஷியில் மிகவும் ஆக்ரோஷமான அதிரடி முறையை பின்பற்றி வருகிறது. தற்போது இவர்களுக்கு என உலகம் தழுவி தனி ரசிகர் கூட்டம் டெஸ்ட் அணுகுமுறைக்கு இருக்கிறது.

இங்கிலாந்தின் இந்த அதிரடி டெஸ்ட் அணுகுமுறை சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய மண்ணில் எடுபடுமா? என்கின்ற எதிர்பார்ப்பு உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இருக்கிறது. எனவே இதன் காரணமாகவும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

- Advertisement -

அடுத்து இந்த தொடரில் இடம் பெற்றிருக்கும் இங்கிலாந்து அணியின் புகழ்பெற்ற வேகப் பந்துவீச்சாளர் ஆண்டர்சனுக்கு இதுவே கடைசி இந்திய சுற்றுப்பயணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி உலக கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு எதிராக ஆண்டர்சன் பந்து வீசுவதை பார்ப்பது கடினம். இப்படி இந்த தொடரை சுற்றி நிறைய உணர்வுபூர்வமான விஷயங்களும் வருகிறது.

தற்பொழுது இங்கிலாந்து அணியின் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு ஒரு மாதம் இருக்கும் பொழுதே 16 பேர் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி :

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்)
ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சோயப் பஷீர், ஹாரி புரூக், ஸாக் கிராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வுட்.