இந்திய அணி வீரரின் தம்பி அதிரடி.. 127*ரன்.. 13 சிக்ஸர்.. அண்ணனை தாண்டி வாய்ப்பு பெறுவாரா?

0
52310
ICT

இந்திய கிரிக்கெட் வாரியம் உள்நாட்டிலிருந்து கிரிக்கெட் திறமைகளை உருவாக்குவதற்காக பல விதமான கிரிக்கெட் போட்டிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

குறிப்பாக 19 வயதுக்கு உட்பட்டவர்களில் ஆரம்பித்து இந்திய ஏ அணி என தொடர்ச்சியாக பெரிய போட்டிகளில் இளம் வீரர்களை இந்திய அணி நிர்வாகம் விளையாட வைத்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்திய ஏ அணியில் இடம்பெறும் ஒரு இந்திய இளம் வீரர், இந்திய அணிக்காக சர்வதேச போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பொழுது, அதற்கு முன்னரே வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய அனுபவம் பெற்றவராக இருப்பார்.

இதற்கு முன்பாக இளம் வீரர்களை பட்டடை தீட்டுவதற்காக அண்டர் 19 அணிகளுக்கு நிறைய போட்டிகள் ஒதுக்கப்படுகிறது. இதிலும் ஏ அணி மற்றும் பி அணி என பிரிக்கப்பட்டு போட்டிகள் கொடுக்கப்படுகிறது.

இந்த வகையில் தற்பொழுது இந்திய அண்டர் 19 ஏ அணி, இந்திய அண்டர் 19 பி அணி, இங்கிலாந்து அண்டர் 19 ஏ அணி, பங்களாதேஷ் அண்டர் 19 ஏ அணி என நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் தொடர்நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் மாநில அணிக்காக மும்பைக்கும், ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கும் விளையாடி வரும் சர்ப்ராஸ் கான் தம்பி முசீர் கான் அபாரமான ஆட்டத்தை பேட்டிங் மற்றும் பௌலிங் என வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

நேற்று இந்திய அண்டர் 19 பி அணிக்கு எதிராக இந்திய அண்டர் 19 ஏ அணி சார்பில் விளையாடிய முஷிர் கான் 47 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்கள் உடன் 127 ரன்கள் ஆட்டம் இழக்காமல் குவித்து அசத்தியிருக்கிறார். மேலும் இவர்கள் அணி 349 ரன்கள் எடுத்து, எதிர் அணியை 293 ரன்கள் கட்டுப்படுத்தி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் இவர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரராக இருக்கிறார். இந்தத் தொடரில் மொத்தம் இவர் 12 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். அண்ணனை விட இவருக்கு இந்திய கிரிக்கெட்டில் எதிர்கால வாய்ப்புகள் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

இதுகுறித்து பேசி உள்ள முஷீர் கான் கூறும் பொழுது ” எனது பயிற்சியாளரான எனது தந்தை, மும்பை கிரிக்கெட் சங்கம்,
மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் இந்த பயணத்தில் எனது ஆட்டத்தை மேம்படுத்த உதவிய அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அண்டர் 19 ஆசியக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். நிச்சயம் நாங்கள் வெல்வோம்” என்று கூறியிருக்கிறார்!