தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் விராட் கோலிக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மிகவும் நெகிழ்ச்சியான முறையில் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா திடீரென ஓய்வு பெற்ற நிலையில் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. நல்ல உடல் தகுதி இருக்கும் விராட் கோலி சீக்கிரத்தில் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பரவிய சர்ச்சை செய்தி
இந்த நிலையில் சில நாட்களாக விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை கேட்டதாகவும், ஆனால் இங்கிருந்து எதிர்காலத்திற்கு நீண்ட நாட்கள் செயல்படக்கூடிய ஒரு இளம் கேப்டன்தான் வேண்டும் என கம்பீர் பிடிவாதமாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து விட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இடையே பிரச்சனைகள் ஆரம்பித்து விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் விராட் கோலி ஓய்வை அறிவித்ததும் சமூக வலைதளங்களில் கம்பீர் பயிற்சியாளராக வந்ததுதான் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஓய்வுக்கு முக்கிய காரணம் என்று பேசப்பட்டு வருகிறது.
நீ சிங்கம்தான்
இந்த நிலையில் ஏபி
டிவில்லியர்ஸ், ஜெய்ஸ்வால் என உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் சீனியர் ஜூனியர் என்ற வித்தியாசம் இல்லாமல் விராட் கோலியை மிகப்பெரிய அளவில் பாராட்டி வாழ்த்தி கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் கம்பீர் உடைய வாழ்த்தும் வெளிவந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க : ரோகித் விராட் ஓய்வு.. 2 இடங்களுக்கு போட்டியிடும் 5 இளம் வீரர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? – முழு தகவல்கள்
இந்த நிலையில் விராட் கோலிக்கு கம்பீர் வெளியிட்டு இருக்கும் வாழ்த்து செய்தியில் ” இந்த மனிதன் சிங்கத்தின் குணம் கொண்டவர். சீக்கு உங்களை நாங்கள் தவற விடுகிறோம்” என்று நெகிழ்ச்சியான முறையில் வாழ்த்தியிருக்கிறார். இவருடைய இந்த வாழ்த்து தற்பொழுது கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு இடையே எந்த பிரச்சினையும் இல்லை என்பதை காட்டுகிறது. ரசிகர்கள் இதை ஆச்சரியமாக பகிர்ந்து வருகிறார்கள்.






