இந்திய கிரிக்கெட்

6 இன்னிங்ஸ்.. வெறும் 72 ரன்.. தனது மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டி

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் தனது பேட்டிங் ஃபார்ம் குறித்து சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு, தொடக்கம் சிறப்பாக இருந்த போதிலும் அதற்கு பின்னால் வந்த வீரர்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறியதால் 19.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதற்குப் பின்னர் விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இதில் நேற்றைய போட்டியில் அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் 5 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் இந்த தொடரின் 6 இன்னிங்ஸ்களில் 72 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் சூரியகுமார் யாதவ் வலைகளில் தொடர்ந்து பயிற்சிகள் செய்து வருவதாகவும் அதற்கான வெகுமதி விரைவில் கிடைக்கும் எனவும் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “எனது பேட்டிங் ஃபார்ம் குறித்து பேசுகையில், நான் வலைகளில் என்ன செய்கிறேன் நான் எப்படி தயாராகிறேன் என்பதில் நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். போட்டி தொடங்கிய பிறகு எல்லாமே தன்னியக்கமாக மாறும். நீங்கள் நான் பார்மில் இல்லை என்று கூறலாம். நான் பார்மில் இல்லாமல் இல்லை ரன்கள் குவிப்பதில் தான் சற்று பின்தங்கி இருக்கிறேன். ஆனால் அதுவும் விரைவில் வரும்.

இதையும் படிங்க:பவுலர் யாரா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல.. கம்பீர் சூர்யா பாய் எனக்கு கொடுத்த வேலை இதுதான் – அபிஷேக் ஷர்மா பேட்டி

நீங்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளுங்கள், உங்களது பயிற்சி திட்டங்களில் கவனம் செலுத்துங்கள் ஓய்வெடுங்கள் கடவுள் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் சரியான நேரத்தில் வெகுமதிகள் கிடைக்கும்” என்று கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 69 ரன்கள் குவித்த திலக் வர்மா ஆட்டநாயகனாகவும், தொடரில் சிறப்பாக செயல்பட்ட அபிஷேக் சர்மா தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

- Advertisement -
Published by

Recent Posts