18 கோடிக்கு தகுதியா? என நினைத்தபோது என் மனதில் இதுதான் தோன்றியது – பஞ்சாப் அணி வீரர் சஹால் பேட்டி

0
122

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் பஞ்சாப் அணி தற்போது புதிய கேப்டனோடு இந்த ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் பஞ்சாப் அணிக்கு புதிதாக வாங்கப்பட்ட இந்திய சுழற் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திரா சகால் தனக்கு கொடுக்கப்பட்ட விலை குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் அணியில் சகால்

இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிக எதிர்பார்ப்புகளோடு களமிறங்க உள்ளது. அந்த அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் நட்சத்திரம் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமை தாங்க இருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று தர முக்கிய காரணமாக இருந்ததால் இந்த ஆண்டு அவரது விலை 26.75 கோடி ரூபாயாக ஏலத்தில் உயர்த்தப்பட்டது.

மேலும் இந்த அணியில் மற்றொரு சுழற் பந்து வீச்சாளரான இந்திய அணியின் யுஷ்வேந்திர சஹால் 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியில் வாங்கப்பட்டார். கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு சிறப்பாக செயல்பட்ட நிலையில் அவரை தக்க வைக்க முடியாததால் அவரை வெளியிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை திரும்ப எடுக்க முயற்சித்தும் முடியவில்லை. இந்த சூழ்நிலையில் பஞ்சாப் அணிக்காக இந்த ஆண்டு களம் இறங்க உள்ள நிலையில் சகால் இது குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

என்னிடம் இந்த கேள்வி இருந்தது

இதுகுறித்து அவர் பேசும் போது “ஏலத்தின் முதல் சில நிமிடங்களை நான் தவற விட்டேன், ஏனென்றால் அப்போது பதட்டமாக இருந்தேன். ஏலம் என்றால் அப்படித்தான் நீங்கள் என்ன விலைக்கு செல்வீர்கள், எந்த அணி உங்களை வாங்கும் என்று எதுவும் தெரியாது. அப்போது உங்கள் மனதில் நிறைய எண்ணங்கள் தோன்றும். என் வீட்டிற்கு அருகில் நான் இப்போது இருக்க போகிறேன் என்று மகிழ்ச்சி அடைகிறேன். 18 கோடி ரூபாய்க்கு நான் தகுதியானவனா? என்று என்னை நான் கேட்டுக் கொண்ட போது உள்ளிருந்து நான் தகுதியானவன் என்ற பதில் வந்தது.

இதையும் படிங்க:நான் ரூமுக்கு சென்று தனியா சோகமா இருக்க விரும்பல.. பிசிசிஐயின் விதியில் தனக்கு உடன்பாடு இல்லை – விராட் கோலி

என்னிடம் நான்கு வகையான பந்துவீச்சு வேரியேஷன்கள் உள்ளன. லெக் ஸ்பின், இரண்டு வகையான கூக்லி மற்றும் ப்லிப்பர். நான் அதை முழுதாக நம்புகிறேன். அவற்றை விட முக்கியமானது களத்தில் நம்பிக்கை வேண்டும். போட்டிகளில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பது தான் மிகவும் முக்கியம். எப்போது விக்கெட் எடுக்க வேண்டும் எப்போது ரன்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் அங்கு தான் தீர்மானிக்கிறீர்கள்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -