உள்நாட்டு கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்குமா?

0
122
Ranji

இந்தியாவில் தற்போது இந்த ஆண்டுக்கான ரஞ்சி சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியை எப்போதும் உறுதி செய்து கொண்டே இருப்பதற்கு, இந்திய உள்கட்டமைப்பை பலமாக்குவதற்கு, ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் மிக முக்கியமான ஒரு தொடராக இருக்கிறது.

- Advertisement -

நடப்பு ரஞ்சி சீசனில் மூன்றாம் கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு போட்டியில் விதர்பா மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற விதர்பா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணி 206 ரன்களில் சுருண்டது.

ஆனால் இதற்கு தங்களுடைய பந்துவீச்சில் சௌராஷ்டிரா அணி பெரிய பதிலடி கொடுத்தது. தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய விதர்பா அணியை 78 ரன்களுக்கு சுருட்டி அசத்தியது.

- Advertisement -

இதற்கடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய சௌராஷ்டிரா அணி ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 244 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.

இதனையடுத்து விதர்பா அணிக்கு பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 373 ரன்கள் என்ற கடினமான டார்கெட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தற்பொழுது விதர்பா அணி 26 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் டெஸ்ட் நட்சத்திர வீரர் செதேஸ்வர் புஜாரா முதல் இன்னிங்ஸ் இல் 43 ரண்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்களும் எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் அவர் மொத்தமாக மொத்தமாக முதல் தரப் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்து அசத்தினார். இதற்கு முன்பாக இந்தியர்களில் முதல் தர போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்தவர்களாக சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் மூவர் மட்டுமே இருந்தார்கள். இந்த பெரிய பட்டியலில் புஜாரா இணைந்திருக்கிறார்.

புஜாரா மொத்தமாக 259 முதல் தரப் போட்டிகளில், 428 இன்னிங்ஸ்களில் விளையாடி, 51 ஆவரேஜில், 78 அரை சதங்கள் மற்றும் 61 சதங்கள் உடன், 45 முறை ஆட்டம் இழக்காமல் 20000 ரன்களைக் கடந்திருக்கிறார்.

தற்பொழுது இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் புஜாரா உள்நாட்டு தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தற்பொழுது இரண்டு போட்டிகளுக்கு மட்டுமே இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. தேவைப்படும் பட்சத்தில் மீதி 3 போட்டிகளுக்கு இந்திய தேர்வாளர்கள் புஜாராவை கண்டு கொள்வார்களா? என்கின்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.