பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 கிரிக்கெட் வீரர்கள்

0
247
Ravi Bopara and Samit Patel

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் நிறைய பேர் இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் ரசிகர்கள் மிக அதிக அளவில் காணப்படுவார்கள். கிரிக்கெட்டுக்கும் இந்தியாவுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. பல வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட் விளையாட ஆசை படுவது சகஜமான விஷயமாகிவிட்டது.

உலக கோப்பை டி20 தொடரை கைப்பற்றியது அதேசமயம் சொந்த மண்ணில் உலக கோப்பை தொடரை கைப்பற்றியது என பல சாதனைகளை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தனது பெயருக்குப் பின்னால் வைத்திருக்கிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தங்களது கிரிக்கெட் வீரர்களை வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட அனுமதி அளிக்காது. குறிப்பாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட அனுமதித்தது கிடையாது.

- Advertisement -

இருப்பினும் இந்தியாவைச் சேர்ந்த அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடி இருக்கின்றனர் அவர்கள் யார் என்பதை இப்பொழுது பார்ப்போம்.

4. சுனில் நரைன் (லாகூர் குவாலண்டர்ஸ்)

Sunil Narine in PSL

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் விளையாடி வருவது நம் அனைவருக்கும் தெரியும். பல ஆண்டு காலமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு டி20 போட்டிகளில் விளையாடி அதைவிட சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர். இவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் லாகூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

3. ரவி போப்பாரா (பெஷாவர் ஜல்மி)

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் சர்வதேச அளவில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி இருக்கிறார் அடிப்படையில் இவர் பௌலிங் வீசக் கூடிய ஒரு ஆல்ரவுண்டர் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக அற்புதமான விளையாடக்கூடிய இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான், ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் போன்ற அணிகளில் பங்கு பெற்று இருக்கிறார்.

இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக முதலில் விளையாடி தற்போது பெஷாவர் ஜல்மி அணிக்காக விளையாடி வருகிறார்.

2. டேனிஷ் ராம்டின் (லாகூர் குவாலண்டர்ஸ்)

Denesh Ramdin PSL

மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். இவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர். டி20 போட்டியில் இதுவரை 200க்கும் அதிகமான போட்டியில் இவர் விளையாடி இருக்கிறார். டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடிய இவர் இதுவரை ஒருமுறை கூட இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் விளையாடியது இல்லை.

ஆனால் இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் லாகூர் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1. சமிட் பட்டேல் (லாகூர் குவாலண்டர்ஸ்)

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீபத்தில் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச அளவில் விளையாடி இருக்கிறார். சமீர் அடிப்படையில் ஒரு ஆல்ரவுண்டர் வீரர் வலதுகை பேட்ஸ்மேன் அதேசமயம் இடதுகை ஸ்பின் பவுலிங் போட கூடிய ஒரு வீரர். இவர் இங்கிலாந்து அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள் 36 ஒருநாள் போட்டிகள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

36 வயதான இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் லாகூர் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஒருமுறை கூட இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.