” இந்திய அணிக்கு உலக லெவன் அணிக்கும் போட்டி வையுங்கள் ” பிசிசிஐ நிர்வாகத்திடம் இந்திய அரசு கோரிக்கை ! காரணம் இதுதான்

0
376
Indian team and Ganguly

இந்திய அணி ஐ.பி.எல் முடிந்து செளத் ஆப்பிரிக்க அணியோடு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதற்கு அடுத்து அயர்லாந்திற்கு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடிவிட்டு, தற்போது இங்கிலாந்தில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது!

இதற்கடுத்து வெஸ்ட் இன்டீசிற்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், இதற்கடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது. இதில் கடைசி இரண்டு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இதையடுத்து இந்திய அணி ஆகஸ்ட் 18 முதல் 22 ஆம் தேதி வரை ஜிம்பாப்வேற்குச் சுற்றுப்பயணம் செய்து, அந்த அணியோடு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கு இளம் இந்திய வீரர்கள் கொண்ட ஒரு அணியே பங்கேற்கும் எனத் தெரிகிறது. இந்த அணிக்குப் பயிற்சியாளராக லஷ்மன் இருப்பாரெனத் தெரிகிறது.

இந்தக் காலக்கட்டத்தில் ஆகஸ்ட் 27 இலங்கையில் தொடங்கும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய முன்னணி வீரர்கள் கொண்ட அணி பங்கேற்கிறது. இந்தத்தொடர் அடுத்து நவம்பர் முதல் வாரம் தாண்டி நீள்கிறது.

இதையடுத்து இந்திய அணி நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டோடு மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. இந்தத் தொடர்கள் நவம்பர் 18ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 30ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்கடுத்து அக்டோபர் மாதம் நியூசிலாந்திலிருந்து அருகிலுள்ள ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கிறது இந்திய அணி.

- Advertisement -

தற்போது இந்திய அரசின் சார்பில், இந்தியாவின் 75வது சுதந்திரத் தின ஆண்டை கொண்டாடும் விதமாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறது. என்னவென்றால்; ஆகஸ்ட் 22ஆம் தேதி உலக லெவன் அணியோடு இந்திய அணி மோதும் ஒரு போட்டியை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டிருக்கிறது. நெருக்கடியான போட்டி அட்டவணையோடு இருக்கும் இந்திய அணியை இப்படியொரு போட்டியில் ஆடவைக்க முடியுமா? முடியாதா? என்று தெரியவில்லை.பி.சி.சி.ஐ என்ன செய்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்!