கிரிக்கெட்

ஐசிசி இறுதி போட்டிகளில் அதிகமுறை விளையாடிய 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

ஐசிசி தொடரை 3 வடிவத்தில் நடத்தி வருகிறது. 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் 20 ஓவர் உலக கோப்பை தொடர் அதேபோல சாம்பியன்ஸ் டிராபி தொடர் என மூன்று வகை சர்வதேச தொடரை ஐசிசி நடத்தி வருகிறது. தற்பொழுது அதில் புதிதாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முன் கூறிய மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் அதிக முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முன்னிலையில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 7 முறை 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும், இரண்டு முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும், ஒரு முறை 20 ஓவர் உலக கோப்பை தொடரிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அதே சமயம் இந்திய அணி உலக கோப்பை தொடரில் மூன்று முறையும் இருபது ஓவர் உலக கோப்பை தொடரில் இரண்டு முறையும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 4 முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தற்பொழுது இந்த கட்டுரையில் நாம் எந்தெந்த இந்திய வீரர்கள் அதிக முறை ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்கள் என்று பார்ப்போம்

- Advertisement -

1. யுவராஜ் சிங் – 7 முறை

யுவராஜ் சிங் இதுவரை ஏழு முறை ஐசிசி உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறார். 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரையில், 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் 2011 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராகவும் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார்.

அதேபோல 20 ஓவர் உலக கோப்பை தொடரில் 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராகவும் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார். சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை பொறுத்தவரையில் இரண்டாயிரத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், 2002ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராகவும், 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார்.

2. மகேந்திர சிங் தோனி – 5 முறை

Photo: Getty Images

மகேந்திர சிங் தோனி 2011ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார். 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராகவும் இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

அதேபோல சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இறுதிப்போட்டியில் மகேந்திர சிங் தோனி விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. விராட் கோலி – 5 முறை

விராட் கோலி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் 2011ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடினார். 20 ஓவர் உலக கோப்பை தொடரில் 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடினார்.

அதேபோல சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2013ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021 இறுதி போட்டியிலும் விளையாடி வருகிறார்

4. ரோஹித் சர்மா – 5 முறை

ரோஹித் சர்மா 20 ஓவர் உலக கோப்பை தொடரில் 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராகவும் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2013ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார்.

ரோஹித் சர்மா 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இதுவரை விளையாடியதில்லை என்பது குறிப்பிடதக்கது.

5. சச்சின் டெண்டுல்கர் – 4 முறை

சச்சின் டெண்டுல்கர் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும், 2011 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டாயிரத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், 2002ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராகவும் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் 20 ஓவர் உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by