இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக இருந்த யுசுவேந்திர சகால் இந்திய அணியில் இடம் இல்லாத நிலையில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
அவர் இந்திய அணியில் விளையாடிய காலகட்டத்தில் ரோஹித் சர்மாவின் நட்பு மற்றும் சகோதரத்துவம் குறித்து சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
ரோஹித் சர்மா கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் தந்த கேப்டன் பதவியை விட்டு விலகி தற்போது ஒரு நாள் பார்மெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் இரண்டிலும் ஓய்வை அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அவர் கேப்டனாக பணியாற்றிய போது அவர் அனைத்து வீரர்களிடம் சகோதரத்துவம் மற்றும் நட்பாக பழகினார் என்று அனைவரும் கூறுவார்கள்.
இருப்பினும் மைதானத்தில் விளையாட்டின் போது சிறு சிறு கேலிகள் செய்யவும் அவர் தயங்குவதில்லை. இந்த சூழ்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாடிக் கொண்டிருந்தபோது டக் அவுட்டில் அமர்ந்திருந்த ரோகித் சர்மா மற்றும் சகால் இருவர் மீதும் கேமரா திரும்ப அப்போது ரோஹித் சகாலை முதுகில் அடிக்கும் காட்சிகள் வெளியானது.
இது குறித்து சகால் அந்த நிகழ்வு குறித்து கூறும் போது ” அது மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது நடந்தது. அது ஒருநாள் போட்டி விராட் கோலி மற்றும் ரோஹித் பையா இருவரும் அப்போது ஓய்வில் இருந்தனர். நானும் அதற்கு முந்தைய தொடர் முழுவதும் ஓய்வில் இருந்தேன். அந்த சம்பவம் வெறும் வேடிக்கைக்காக மட்டுமே நடந்தது. எனக்கு ரோஹித் பையாவை 2011 ஆம் ஆண்டிலிருந்து தெரியும்.
எனக்கும் அவருக்கும் இடையே நல்ல ஒரு சகோதரர் பிணைப்பு உள்ளது. ஆனால் அவர் என்னைத் தொடர்ந்து கேலி செய்து கொண்டிருப்பார். இதற்கு அனைத்தும் காரணம் கேமரா மட்டும்தான். கேமரா மட்டும் அங்கே இருந்திருக்கவில்லை என்றால் என்னிடம் இருக்கும் ஒரு வேடிக்கையான குணம் அவரிடம் வெளிப்பட்டிருக்கும். அதனால் அவர் என்னைவிட பெரியவர் நான் அதனால் அவரை மன்னித்து விடுகிறேன்” என்று பேசி இருக்கிறார்.