இந்திய கிரிக்கெட் அனுபவ வீரரும் ஐபிஎல் தொடரின் அனுபவ வீரருமான வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 18 வது ஐபிஎல் சீசனுக்கு மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் தன்னை எந்த அணியும் எடுக்காதது குறித்து உமேஷ் யாதவ் தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
எந்த அணியும் வாங்கவில்லை
இந்திய வேகப்பந்துவீச்சாளரான உமேஷ் யாதவ் ஐபிஎல் தொடரில் இதுவரை டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என நான்கு அணிகளுக்கு இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கிறார். இதுவரை மொத்தமாக 148 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 144 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு உமேஷ் யாதவ் 5.80 கோடி ரூபாய்க்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை உமேஷ் யாதவ் 15 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த நிலையில் முதல்முறையாக எந்த அணியும் தன்னை ஏலத்தில் எடுக்காதது வருத்தம் அளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். மேலும் தன்னால் 140 கிலோ மீட்டர் வேகத்தில் என்று பந்து வீச முடியவில்லையோ அந்த தருணமே நான் கிரிக்கெட்டில் இருந்து விலகி விடுவேன் என்று சில முக்கிய கருத்துக்களையும் கூறி இருக்கிறார்.
எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு
இதுகுறித்து உமேஷ் யாதவ் விரிவாக கூறும்போது “இந்த ஆண்டு நான் ஐபிஎல் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என்று எனக்குத் தெரியும். நான் கடந்த 15 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறேன். இது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. நான் எதற்காக பொய் சொல்ல வேண்டும். இது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. 150 ஐபிஎல் போட்டிகளுக்கு மேல் விளையாடிய நிலையிலும் எந்த அணியும் தன்னை தேர்வு செய்யாதது ஆச்சரியமாக இருக்கிறது.
இதையும் படிங்க:ரோஹித் அங்க ஃபீல்டிங் செஞ்சா.. யாராலயும் 2 ரன் ஈஸியா எடுக்க முடியும் – விமர்சிக்கும் முன்னாள் இந்திய வீரர்
என்னை எந்த அணியும் எடுக்கவில்லை என்பது அந்த அணி உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உத்திகளை பொறுத்தது. அல்லது எனது பெயர் ஏலத்திற்கு தாமதமாக வந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் ஐபிஎல் உரிமையாளர்களிடையே பணம் மிச்சம் இல்லாமல் போயிருக்கலாம். எப்படியும் ஏதோ ஒன்று நடந்து விட்டது. நான் மிகவும் விரக்தி அடைந்து கலக்கமடைந்துள்ளேன். ஆனால் இது பரவாயில்லை யாருடைய முடிவையும் என்னால் மாற்ற இயலாது, மேலும் எனக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. என்னால் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீச முடியும் என்று உணர்கிறேன். என்னால் எப்போது இது முடியவில்லையோ நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்” என்று கூறி இருக்கிறார்.






