கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

என் பவுலிங் இந்த 2 விஷயத்தை நம்பி மட்டுமே இருக்கும்.. ஸ்பெஷல் திட்டம் இல்லாமதா வருவேன் – முகமது சமி

நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்திய அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் முக்கிய காரணமாக அமைந்த முகமது சமி தனது திட்டம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய சமி

கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பைக்குப் பிறகு காயம் காரணமாக இந்திய அணியை விட்டு வெளியேறிய முகமது சமி, அதன் பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலமாக இந்திய அணிக்கு விளையாடவில்லை. அறுவை சிகிச்சை செய்து கொண்டு தீவிர ஓய்வில் இருந்து வந்த அவர் சமீபத்தில் இந்திய உள்நாட்டு தொடரான ரஞ்சி டிராபி தொடரில் பங்கு பெற்று சிறப்பாக விளையாடினார். அதற்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் தனது அறிமுகத்தை நிலைநிறுத்தினார்.

ஓரளவு நன்றாக விளையாடினார் என்றாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதற்குப் பின்னர் சாம்பியன்ஸ் டிராபித் தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடிய முகமது சமி சிறப்பாக பந்து வீசி 5 vமுக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். இது வங்கதேச அணி சரிவதற்கு அவரது பந்துவீச்சு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் தனது செயல்பாடு குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

எனது திட்டம் இதுதான்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நான் சிறப்பு மனநிலையை கொண்டிருக்கவில்லை. நீங்கள் ஒரு போட்டியில் வெற்றி பெறும் போதும் சிறப்பாக செயல்படும் போதும் ஒரே மாதிரியான மனநிலையை கொண்டிருக்க வேண்டும். ஐசிசி போட்டி அல்லது எந்த சர்வதேச போட்டியாக இருந்தாலும் அது குறித்து நீங்கள் அதிகமாக சிந்திக்க வேண்டியது இல்லை. குறிப்பாக நீங்கள் உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து உங்களை நீங்களே ஆதரிக்க வேண்டும்.

இதையும் படிங்க:2004ல் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன்.. அப்போது முதல் ஹோட்டலில் ஆர்டர் செய்யும் உணவு இதுதான் – தோனி சுவாரஸ்யம்

நான் இந்த இரண்டு விஷயங்களை மட்டுமே முழுமையாக நம்பி சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன். என்னையே நான் ஆதரிக்கிறேன். எனவே மனநிலையை மாற்றுவது ஒரு கடினமான விஷயம் அல்ல. கடினமான காலங்களில் நீங்கள் மாறவில்லை என்றால், அத்தகைய காலங்களில் நீங்கள் மாற மாட்டீர்கள்” என்று கூறி இருக்கிறார். அடுத்ததாக இந்திய அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளதால் தனது திட்டத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts