இந்திய கிரிக்கெட்

நாங்க தப்பு செஞ்சோம்னு கோச் கம்பீர் ஒத்துக்கணும்.. இதுக்கும் அவர்தான் பொறுப்பு – தினேஷ் கார்த்திக் பேட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் டிரா செய்துள்ளது.

- Advertisement -

தோல்வி அடையாத இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்

இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. இதனால் டெஸ்ட் தொடர் இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி சரி சமமாக டிராவில் முடிவடைந்துள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இப்போது இந்திய அணியை தன் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார் என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

பேட்டிங் செய்வதற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து டெஸ்ட் அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் கம்பீர், 20 விக்கெட்டுகள் வீழ்த்தும் அதே மனநிலையில் இனி வீரர்களை தேர்வு செய்வார் என நம்புவதாக தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். மேலும் இந்திய அணியின் முழு செயல்பாட்டிற்கும் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் அவரே பொறுப்பேற்பார் என சில முக்கிய விஷயங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பொறுப்பேற்க வேண்டும்

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும்போது “கௌதம் கம்பீர் இந்திய அணியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் தற்போதைய கேப்டனுடன் சேர்ந்து ஒரு உந்து சக்தியாக இருக்கிறார். பேட்டிங்கில் ஆழம் எவ்வளவு முக்கியம் என்று உணர்கிறாரோ அதேபோல 20 விக்கெட்டுகள் வீழ்த்துவதில் தீவிரமாக இருப்பதும் அவரால் முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு அற்புதமான வெள்ளை பந்து பயிற்சியாளர் அதன் விளைவுகள் நமக்கு புரியும்.

இதையும் படிங்க:கில் கிட்ட மொத்தம் 3 மாற்றத்தை பார்த்தேன்.. தம்பி அத நிச்சயம் செய்யப் போறார் – சச்சின் பாராட்டு

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் வேலைகளை கற்றுக் கொண்டு வருகிறார். தோல்வி அடையாத அணியை தேர்ந்தெடுத்தார் என்று நீங்கள் வாதிடலாம். ஆனால் இப்போது அவர் சொந்த முடிவுகளை எடுக்கிறார். எனவே இந்திய அணியில் நடக்கும் அனைத்திற்கும் அவர் பொறுப்பாவார். நன்றாக செயல்பட்டால் அவருக்கு பாராட்டு ஒருவேளை நன்றாக செயல்படவில்லை என்றால் அவர் கைகளை உயர்த்தி நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று சொல்ல வேண்டும்” என்று தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by