சில பேருக்குதான் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும்.. ஓய்வு பெறும் முன் விரக்தி அடைந்த அமித் மிஸ்ரா

0
30

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளராக திகழ்ந்த அமித் மிஸ்ரா நேற்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மொத்தமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில் தான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது சந்தித்த ஏற்ற இறக்கங்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை அமித் மிஸ்ரா பேசியிருக்கிறார்.

- Advertisement -

2003 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அமித் மிஸ்ரா 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தனது கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாடினார். அதற்குப் பிறகு அவர் இந்திய அணிக்காக எந்த போட்டியிலும் பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 22 டெஸ்ட், 36 ஒரு நாள் போட்டி மற்றும் 10 டி20 போட்டிகளில் அமித் மிஸ்ரா விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் நேற்று ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இருப்பினும் அமித் மிஸ்ரா தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் ஓய்வு பெறும் நிலையில் மிஸ்ரா இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை கேப்டன்களின் அபிமான வீரர்கள் தொடர்ந்து வாய்ப்பு பெறுவார்கள் எனவும், சிலர் வாய்ப்பு பெற கடுமையாக போராட வேண்டும் எனவும் வெளிப்படையாக தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இது மிகவும் ஏமாற்றம் அளிக்க கூடிய ஒரு விஷயமாகும். நீங்கள் சில நேரங்களில் அணியில் இருப்பீர்கள் சில நேரங்களில் அணியை விட்டு வெளியே இருப்பீர்கள். சில சமயங்களில் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் சில சமயங்களில் அந்த வாய்ப்பு கிடைக்காது. இது நிச்சயமாக விரக்தி அடையக் கூடிய ஒரு செயலாகும். சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் நான் விரக்தி அடைந்து இருக்கிறேன்.

இதையும் படிங்க:54 வருட ODI வரலாறு.. முதல் வீரராக தென் ஆப்பிரிக்கா பிரிட்ஸ்கீ மெகா உலக சாதனை.. சச்சின் விராட்டுக்கும் கிடைக்காத வாய்ப்பு

சில வீரர்கள் கேப்டனின் விருப்பமானவர்கள். அவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படும். ஆனால் அது பெரிய விஷயம் அல்ல. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் நிரூபித்தாக வேண்டும். நான் விரக்தி அடைந்த சமயத்தில் எல்லாம் எப்படி முன்னேற முடியும் என்று யோசித்தேன். பேட்டிங், பந்து வீச்சு என எதில் தன்னை நிருபிக்க முடியும் என்று செயல்பட்டேன். இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் நன்றாக செயல்பட்டேன். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அமித் மிஸ்ரா பேசியிருக்கிறார்.

- Advertisement -