இந்திய கிரிக்கெட்

என்னோட டெஸ்ட் அறிமுகத்துக்கு முன்.. ராகுல் சாரிடம் இதுக்காக மன்னிப்பு கேட்டேன் – ஆகாஷ் தீப் பேட்டி

இந்திய அணிக்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஆகாஷ் தீப் சிறப்பாக செயல்பட்டு தனது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக அவர் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் மன்னிப்பு கேட்டதாக சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து தொடரில் அறிமுகமான ஆகாஷ் தீப்

இந்திய அணியின் பயிற்சியாளராக திகழ்ந்த ராகுல் டிராவிட், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றதோடு தனது பயிற்சியாளர் பதவியை விட்டு விலகுவதாக டிராவிட் அறிவித்தார். அவரது பயிற்சியின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணி ஒரு நாள் உலகக் கோப்பையில் இறுதி போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும், சிறப்பான வீரர்களும் அறிமுகமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் அந்த டெஸ்ட் தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். மேலும் இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பார்டர் கவாஸ்கர் டிராபியில் இரண்டு ஆட்டங்களில் விளையாடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த சூழ்நிலையில் ஆகாஷ் தீப் டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் முன் டிராவிட்டிடம் மன்னிப்பு கேட்டதாக சில தகவல்களை கூறி இருக்கிறார்.

- Advertisement -

ராகுல் சாரிடம் மன்னிப்பு கேட்டேன்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” டெஸ்ட் தொப்பி வாங்குவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ஒரு கனவாகும். மற்ற எல்லா குழந்தைகளையும் போலவே நானும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பிய வீரர்களில் ஒருவர். அந்த சமயத்தில் தான் ராகுல் டிராவிட்டிடம் இருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. அப்போது அவருடைய செல்போன் நம்பர் இல்லாததால் அந்த செய்தி உண்மைதானா என்று எனக்கு தெரியவில்லை. இதனால் யாராவது என்னிடம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறீர்களா என்று கேட்டால் நான் அதனை புறக்கணித்தேன்.

இதையும் படிங்க:பும்ரா கோலி இல்லை.. நவீன கால சிறந்த டெஸ்ட் வீரர் நிச்சயமா இவர்தான் – இங்கி மைக்கேல் வாகன் தேர்வு

அதற்குப் பின்னர் தான் அதனை சரியாக கவனித்து அது ராகுல் சாரின் நம்பர் தான் என்பதை அறிந்தேன். அதற்குப் பின்னர் நான் அவருக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டேன். அப்போதுதான் அவர் நான் விளையாடுவதை உறுதிப்படுத்தினார்” என்று ஆகாஷ் தீப் கூறியிருக்கிறார். அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ள நிலையில் டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் அறிமுகமாகவில்லை. சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணி அவரை எட்டு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by