இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை தற்காலிகமாக சமன் செய்திருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி குறித்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாவும் பேசி இருக்கிறார்.
இன்று இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் மூவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா, அர்ஸ்தீப் சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் மூவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
விமர்சனங்களுக்கு முடிவு
தற்போது சிறந்த பவுலிங் பார்மில் இருந்து வரும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங்குக்கு வாய்ப்பு தராமல் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை கம்பீர் அழித்து வருவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் கீழ் வரிசையில் விளையாட ஜிதேஷ் சர்மா சரியானவராக இருப்பார் என்று கூறப்பட்டது.
இத்துடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் யாதவ் இடத்துக்கு தமிழக சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இன்று வாய்ப்பு பெற்ற அனைவருமே சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். இந்த அணி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரியான அணியாக உணர்கிறேன்
இந்த வெற்றி குறித்து பேசி உள்ள கேப்டன் சூரியகுமார் யாதவ் “நாங்கள் பல டாஸ் இழந்த நிலையில் இன்று டாஸ் வென்றது மிகவும் முக்கியமாக அமைந்தது. அனைத்து வீரர்களுமே கடினமாக பயிற்சி செய்து வாய்ப்புக்காக காத்திருந்தார்கள். இன்று நாங்கள் களம் இறங்கியது சரியான அணி என்று நான் உணர்கிறேன். வாய்ப்பு பெற்ற அனைவருமே அற்புதமாக செயல்பட்டார்கள்”
இதையும் படிங்க : நான் எதிர்ப்புகளை விரும்புகிறேன்.. எனக்கு கிடைக்கிற நல்லதுக்கு அந்த ஒரு வீரர்தான் காரணம் – அர்ஷ்தீப் பேச்சு
“வாஷிங்டன் மற்றும் ஜிதேஷ் சர்மா சிறப்பாக விளையாடி ஆட்டத்தை முடித்தார்கள். பும்ரா, அர்ஸ்தீப் சிறந்த ஜோடி. பும்ரா நல்ல இறுக்கமாக பந்து வீசுவது, அர்ஸ்தீப் சிங் விக்கெட் கைப்பற்ற உதவியாக இருக்கிறது. இந்த ஜோடி அபிஷேக் மற்றும் கில் ஜோடி மாதிரியே சிறப்பானது. தற்போது தொடர் சமநிலையில் இருக்கிறது. நாங்கள் அடுத்த புதிய இடத்திற்கு விளையாட செல்கிறோம். எங்கள் வீரர்கள் மிகுந்த நம்பிக்கை உடன் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






