எனக்கும் கம்பீருக்கும் பிரச்சனையா.. என் பதில் இதுதான்.. அந்த ரகசியத்தை சொல்ல மாட்டேன் – ரோகித் சர்மா பேட்டி

0
289

பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித் சர்மா மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்துகொண்டு அணியை அறிவித்தார்கள்.

இந்த சூழ்நிலையில் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவருக்கும் இடையேயான உறவு முறை குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியை அறிவித்த கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் கௌதம் கம்பீர் டிரெஸ்ஸிங் ரூமில் இந்திய அணி வீரர்களை வசை பாடியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. மேலும் இந்திய அணிக்குள் ஆரோக்கியமற்ற சூழ்நிலை இருப்பதாக பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.

மேலும் பயிற்சியாளர் குழுவை பிசிசிஐ ஆய்வு செய்யப் போவதாக அவர்களின் தரம் குறித்து ஆராயப் போவதாக சில கருத்துக்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் இந்திய அணியை அறிவித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை அறிவித்தனர். இந்த சூழ்நிலையில் மற்றொரு செய்தியாளர் ஒருவர் கேப்டன் பயிற்சியாளர் உறவுமுறை குறித்து சில கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

- Advertisement -

நான் எதையும் கூறப்போவதில்லை

இதுகுறித்து ரோகித் சர்மா விரிவாக கூறும்போது ” நான் மற்றும் கம்பீர் ஆகிய இருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஒவ்வொரு போட்டி முடித்த பிறகும் திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை நான் இங்கே உட்கார்ந்து கொண்டு விவாதிக்க போவதில்லை. அது என் மனதில் மிகவும் தெளிவாக இருக்கிறது. கம்பீர உடனான பிணைப்பு எப்போதுமே எனக்கு ஆரோக்கியமாக இருக்கிறது.

இதையும் படிங்க:இந்திய அணி பள்ளியோ.. பிளேயர்ஸ்க்கு இது தண்டனையோ அல்ல.. ரூல்ஸ் போட காரணமே இதுதான் – அஜித் அகர்கர் பேட்டி

ஆடுகளத்திற்குள் நுழைந்ததும் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது குறித்து கம்பீர் என்னை முழுமையாக நம்புகிறார். மைதானத்திற்கு வெளியே மட்டுமே இது போன்ற அடிப்படைப் பேச்சுக்கள் நடக்கும். மைதானத்திலோ அல்லது உடைமாற்றும் அரையிலோ அல்லது ஆடுகளத்திலோ நான் என்ன செய்கிறேன் என்பது வேறு விஷயம். இது நாங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை பற்றியது. அனைவருமே ஒற்றுமையுடன் ஒன்றாக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்” என ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.

- Advertisement -