இந்திய கிரிக்கெட்

ஒரு ஓவரில் 7 சம்பவம்.. அர்ஷ்தீப் சிங் செய்த மோசமான காரியம்.. கடுப்பாகி கத்திய கம்பீர் – களத்தில் என்ன நடந்தது?

இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கி வருகிறார்கள். மேலும் இந்திய பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் தனது பந்துவீச்சில் மோசமான சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -

இரு அணிக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி அடைந்திருந்தது. இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி பஞ்சாப் நியூ சண்டிகர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பனிப்பொழிவால் வந்த மாற்றம்

இன்று தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்யும்பொழுது பனிப்பொழிவு வந்துவிட்டது. இதன் காரணமாக இந்திய அணியும் பனிப்பொழிவில் பந்து வீழ்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இந்திய பந்துவீச்சாளர்களால் பந்தை கிரிப் செய்ய முடியவில்லை.

இதைத்தொடர்ந்து இந்திய அணி எக்ஸ்ட்ரா ரன்களை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. ஒரு முனையில் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன்டி காக் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்க ஆரம்பித்தார். அவர் முதல் 10 ஓவர்களில் அரை சதம் அடிக்க தென் ஆப்பிரிக்கா அணி 90 ரன்கள் தாண்டி எடுத்தது.

- Advertisement -

கடுப்பான கம்பீர்

இதைத் தொடர்ந்து பதினோராவது ஓவரை வீச கேப்டன் சூர்யா குமார் யாதவ் அர்ஸ்தீப் சிங்கை கொண்டு வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தை குயிண்டன் டி காக் சிக்ஸருக்கு அடித்தார். இதற்கு அடுத்து தொடர்ந்து ஆறு பந்துகளை அர்ஸ்தீப் சிங் வைடாக வீசினார். மேலும் ஆறாவது பந்தையும் அதே போல வீசினார். அந்த ஓவரில் மட்டும் மொத்தம் ஏழு வைடுகள் வீசினார்.

இதையும் படிங்க : எங்க டீம்ல ரொம்ப முக்கியமான பிளேயர் அவர்தான்.. இதுதான் முதல் சர்வதேச போட்டியாம் – சூரியகுமார் யாதவ் பேட்டி

இதை வெளியில் இருந்து பார்த்த பயிற்சியாளர் கம்பீர் மிகவும் கடுப்பானார். அடுத்தடுத்து இதே தவறுகள் நடக்க கம்பீர் வெளியில் இருந்து கத்தினார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக வைடுகள் வீசிய இந்திய பவுலராக அர்ஸ்தீப் சிங் மோசமான சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -
Published by