பயிற்சியின் போதுலாம் சிறப்பாக தான் பேட்டிங் செய்கிறார் ; இதுவே அவருக்கு கடைசி வாய்ப்பு – கண்டிப்பாக கூறிய இந்திய பேட்டிங் பயிற்சியாளர்

0
3303
Indian Batting Coach about Rahane

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதே நம்பிக்கையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. தற்போது 3வது போட்டி நடந்து வருகிறது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று விட்டால் முதன்முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு காயம் காரணமாக ஓய்வில் இருந்த விராட் கோலி தற்போது மீண்டும் கேப்டனாக களமிறங்கியுள்ளார். எப்படியும் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி சிறப்பாக விளையாடி 79 ரன்கள் எடுத்தார். அதேபோல மற்றொரு சீனியர் வீரரான புஜாராவும் 43 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்றொரு சீனியர் வீரரான ரஹானே பெரிதாக எதையும் சாதிக்காமல் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஏற்கனவே பல மாதங்களாக மோசமாக விளையாடி வரும் ரஹானேவை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர். அப்படி இருந்தும் விராட் கோலி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார். இருந்தாலும் சமீப காலங்களில் கடந்த 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட சதம் தவிர வேறு எதுவும் பெரிதாக சாதிக்கவில்லை. இந்த தொடரில் கூட கடந்த ஆட்டத்தில் ஒரு அரைசதம் அடித்தார். மீண்டும் பழைய மாதிரி நன்கு ஆட ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் சறுக்கி உள்ளார் ரகானே.

- Advertisement -

ரகானே குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வலைப் பயிற்சியில் ஈடுபடும்போது ரஹானே மிகவும் சிறப்பாக விளையாடுவதாகவும், தன்னால் முடிந்தவரை சிறப்பாக விளையாட முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த தொடரில் கூட அவரிடமிருந்து ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்பட்டது என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக ரஹானேவுக்கு நிச்சயமாக இன்னொரு முறை வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பிலாவது சிறப்பாக விளையாடி அணியில் ரஹானே நீடிப்பாரா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.