ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் சுப்மன் கில்லை டிராப் செய்தற்கான காரணத்தை இந்திய பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறியிருக்கிறார்.
இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மெல்போன் மைதானத்தில் களம் இறங்கியது. இந்த முக்கியமான போட்டியில் இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாவது இடத்தில் களம் இறங்கி வந்த சுப்மன் கில்லை இந்திய அணி நிர்வாகம் கழட்டிவிட்டது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இன்றைய போட்டியில் விளையாடும் இந்திய அணியில் ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா இடம் பெற்று இருக்கிறார். இந்த நிலையில் கில்லை வெளியேற்றிவிட்டு அவருடைய இடத்தில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருக்கிறார். தற்போது மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள், ஒரு மிதவேகப் பந்துவீச்சாளர் என ஆறு பந்துவீச்சாளர்கள் இந்திய பவுலிங் யூனிட்டில் இருக்கிறார்கள்.
மேலும் மூன்றாவது இடத்தில் விளையாடி வந்த கில் கழட்டி விடப்பட்டதால் கேஎல்.ராகுல் மூன்றாவது இடத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார். இத்தோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்காலிகமாக விளையாடி வந்த ஆறாவது இடத்தில் இருந்து, தன்னுடைய வழக்கமான துவக்க இடத்திற்கு மீண்டும் திரும்புகிறார்.
தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் இந்திய அணியில் கில் கழட்டி விடப்பட்டதற்கான உண்மை காரணம் குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : இதுக்கு முன்னாடி பும்ரா இதை செஞ்சதே இல்ல.. சின்ன பையன் மிரள விட்டுட்டாரு – மைக்கேல் வாகன் கருத்து
இது குறித்து அபிஷேக் நாயர் கூறும் பொழுது ” இந்த ஆடுகளத்தை பார்க்கும் பொழுது எங்களுக்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து விளையாடுவது சிறப்பானதாக இருக்கும் என்று தோன்றியது. மேலும் கில் விளையாடாததற்கு நான் தனிப்பட்ட முறையில் வருந்துகிறேன். ஆனால் கில் அவர் சேர்க்கப்படாத குறித்து புரிந்து கொள்கிறார். உண்மையில் அவரை நாங்கள் கைவிடவில்லை. தற்போது அணி கலவையில் அவரை சேர்க்க இடம் இல்லை. மேலும் ரோகித் சர்மா துவக்க வீரராக இந்த போட்டியில் களம் இறங்குவார்” என்று கூறியிருக்கிறார்.