வெ.இ போட்டி.. இந்தியாவுக்கு அடுத்த அதிரடி லக்.. சூரியகுமார் வெளியிட்ட தகவல் – இந்திய அணி சாதிக்குமா?

0
29
Surya

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி வாழ்வா சாவா போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்த கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இதுவரையில் டி20 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என இரண்டு அணிகளுமே தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இரு அணிகளில் மாற்றம்

இந்த போட்டியில் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அதே இந்திய அணி களம் இறங்குகிறது என்பதை சூரியகுமார் யாதவ் கூறி இருக்கிறார். எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி மாற்றமாக துவக்க ஆட்டக்காரர் பிரண்டன் நீக்கப்பட்டிருக்கிறார். அவருடைய இடத்தில் ரோஸ்டன் சேஸ் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது. மேலும் அகேல் ஹுசைன் மீண்டும் பிளேயிங் லெவனில் கொண்டுவரப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணிக்கு சாதகம்

இந்த கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பொதுவாகவே இரண்டாவது பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக இருந்து வருகிறது. இரண்டாவது பந்து வீசும் பொழுது கொஞ்சம் பனிப்பொழிவு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியை வெற்றி பெற வைக்கிறது. இது தற்போது இந்திய அணிக்கு சாதகமாக மாறி உள்ளது.

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரா.. இந்த சிறந்த பவுலரையே உட்கார வைக்க வேண்டிய நிலை தான் உள்ளது.. தினேஷ் கார்த்திக்

டாஸ் நிகழ்வில் சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது ” நாங்கள் முதலில் பதிவு செய்ய இருக்கிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ஏனென்றால் இங்கு கொஞ்சம் பனிப்பொழிவு வருவதை நாங்கள் பார்த்தோம். மேலும் இந்த மைதானம் ரன் துரத்தலுக்கு சாதகமாக இருந்து வந்துள்ளது. கடந்த போட்டியில் நாங்கள் எல்லா பக்கத்திலும் சிறந்ததை வெளிப்படுத்தினோம். எனவே அதே அணியுடன் விளையாடுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -