ஒரே விக்கெட்டில்..13 ஓவர்கள் 120 ரன்கள்.. பயம் காட்டிய ஜிம்பாப்வே.. இறுதியில் வென்ற இந்திய அணி

0
974
Gill

இன்று இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்றாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது இரண்டுக்கு ஒன்று என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே மூவரும் அணிக்கு திரும்பினார்கள். ரியான் பராக், துருவ் ஜுரல், சாய் சுதர்சன் ஆகியோர் நீக்கப்பட்டார்கள். முகேஷ் குமாரை நீக்கி கலில் அகமதுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

மேலும் கில், ஜெய்ஸ்வால் துவக்க ஆட்டக்காரர்களாக வந்தார்கள். டி20 உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடாத ஜெயஸ்வால் இந்த முறை 27 பந்துகள் விளையாடி 36 ரன்கள் எடுத்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து நான்காவது இடத்தில் பேட்டிங்கில் வந்த ருதுராஜ் இந்த முறையும் சிறப்பாக விளையாடி 28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். ஐந்தாவது இடத்தில் வந்த சஞ்சு சாம்சன் ஆட்டம் இழக்காமல் 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் கேப்டன் சிக்கந்தர் ராஸா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி முதல் ஐந்து விக்கெட்டுகளை 39 ரன்களுக்கு இழந்துவிட்டது. இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் மடன்டே மற்றும் டியான் மேயர்ஸ் 57 பந்துகளுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிறப்பாக விளையாடிய மடன்டே 26 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டியான் மேயர்ஸ் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 49 பந்துகளில் 65 ரன்கள், மசகட்சா ஆட்டம் இழக்காமல் 10 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. முடிவில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரின் 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிங்க : இந்திய அணியின் அந்தப் பிரச்சனை முடியப்போகுது.. என் ரோலும் மாறப்போகுது – ஜெய்ஸ்வால் பேட்டி

மேலும் இந்த போட்டியில் முதல் ஏழு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை 39 ரன்களுக்கு இழந்த ஜிம்பாப்வே அணி மேற்கொண்டு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து, 13 ஓவர்களில் 122 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு பயம் காட்டி இருக்கிறது. மேல் வரிசையில் இருந்து ஏதாவது பார்ட்னர்ஷிப் கிடைத்திருந்தால் இந்திய அணி இந்த போட்டியை இழந்திருக்கவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.