Abhishek
இன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனிப்பட்ட காரணங்களால் வீடு திரும்பி இருக்கிறார். மேலும் அக்சர் படேல் விளையாடவில்லை. இவர்களுடைய இடத்தில் ஹர்ஷித்ராணா மற்றும் குல்தீப் யாதவ் இடம் பெற்றார்கள். மேலும் டாப் வென்ற இந்திய அணி முதலில் தென் ஆப்பிரிக்கா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இன்றைய போட்டியில் இந்திய வீகப்பந்து வீச்சாளர்கள் அற்புதமான துவக்கத்தை கொடுத்தார்கள். இதைத்தொடர்ந்து மிடில் ஓவர்களில் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி சுருள காரணமாக இருந்தார். தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியின் தரப்பில் கேப்டன் எய்டன் மார்க்ரம் 46 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக டோனவன் பெரிரா 15 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா, அர்ஸ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்திப் யாதவ் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா 18 பந்தில் 35 ரன்கள் அதிரடியாக எடுக்க, துணை கேப்டன் கில் பொறுமையாக 28 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்தியா அணிக்கு பவர் பிளேவில் 68 ரன்கள் கிடைக்க, போட்டி ஆரம்பம் முதலே இந்திய அணியின் கைகளுக்கு வந்தது.
இதையும் படிங்க : 117 ரன்.. டி20 வரலாற்றில் ஹர்திக் பாண்டியா முதல் வீரராக மெகா சாதனை.. தெஆ பரிதாப சுருட்டல்.. இந்திய பவுலர்கள் அபாரம்
இதற்கடுத்து சூரியகுமார் யாதவ் 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து திலக் வர்மா ஆட்டம் இழக்காமல் 34 பந்துகளில் 25 ரன்கள், சிவம் துபே 4 பந்துகளில் 10* ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 15.3 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி வெற்றி பெற்றாலும் கேப்டன் மற்றும் துணை கேப்டன் சொதப்பல் தொடர்கிறது.