நியூசிலாந்தை பந்துவீச்சிலும் சுருட்டி எறிந்த இந்தியா டி20 தொடரை கைப்பற்றியது!

0
155
ICT

இந்தியா வந்த நியூசிலாந்து அணி உடன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணி இன்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டியில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் மோதியது!

முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் ஒரு போட்டிகளில் வென்று தொடர் சமநிலையில் இருக்க இன்றைய போட்டி தொடரை யாருக்கென்று நிர்ணயிக்கும் போட்டியாக அமைந்திருந்தது.

- Advertisement -

டாஸ் வென்று இந்திய அணியை பேட்டிங் செய்ய ஹர்திக் பாண்டியா முடிவெடுக்க இஷான் கிஷான் வழக்கம்போல் ஏமாற்றினார். ஆனால் மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் மிக அபாரமாக விளையாடி 63 பந்துகளில் 126 ரன்கள் குவித்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணியை 234 ரன்கள் குவிக்க காரணமாக இருந்தார். இது இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச சர்வதேச டி 20 ரன்கள் ஆகவும், இந்திய அணியின் அதிகபட்ச டி20 ரன் ஆகவும் பதிவாகி இருக்கிறது. ராகுல் திரிபாதி 44 ரன்கள், சூரியகுமார் யாதவ் 24 ரன்கள், ஹர்திக் பாண்டியா 31 ரன்கள் எடுத்தார்கள்!

இதற்கு அடுத்து களம் கண்ட நியூசிலாந்து அணியை இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஹர்திக் பாண்டியா, அர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி நால்வரும் சேர்ந்து பெட்டிப் பாம்பாய் அடக்கி சுருட்டி எறிந்து விட்டார்கள். முடிவில் நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் 66 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 168 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்திய அணியின் பந்துவீச்சில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் பந்து வீசி பதினாறு ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்ற மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்கள். உள்நாட்டில் இந்திய அணியின் வெற்றி மேலும் தொடர்கிறது!

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய அணி உள்நாட்டில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராகும் என்பது குறிப்பிடத்தக்கது!